Published:Updated:

பி.ஆர்.பி. மகன் சுரேஷ்குமாருக்கு 7 நாள் போலீஸ் கஸ்டடி? - தீர்ப்பு ஒத்தி வைப்பு! ( படங்கள் )

Vikatan Correspondent

மதுரை: கிரானைட் சக்கரவர்த்தி பி.ஆர்.பி-யின் மகன் சுரேஷ்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் மனு மீதான தீர்ப்பை, வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்திருக்கிறது மேலூர் நீதிமன்றம்.

 பி.ஆர்.பி. மகன் சுரேஷ்குமாருக்கு 7 நாள் போலீஸ் கஸ்டடி? - தீர்ப்பு ஒத்தி வைப்பு!  ( படங்கள் )

இதுவரை போடப்பட்ட வழக்குகளில் எல்லாம் முன்ஜாமீன் பெற்று தப்பிவிட்ட‌ பி.ஆர்.பி-க்கு எதிராக,  அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது போலீஸ். கீழையூர் பகுதியில் அரசு புறம்போக்கு இடங்களில் அத்துமீறி திருட்டுத்தனமாக பல கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டிக் கடத்திவிட்டு, அந்த குவாரிகளை இருந்த இடம் தெரியாமல் மூடிவிட்டதாக வி.ஏ.ஓ அக்பர் சேட் இரண்டு புகார்களைக் கொடுத்திருந்தார்.

 பி.ஆர்.பி. மகன் சுரேஷ்குமாருக்கு 7 நாள் போலீஸ் கஸ்டடி? - தீர்ப்பு ஒத்தி வைப்பு!  ( படங்கள் )

அதன்பேரில், கடந்த 8 ஆம் தேதி தனித்தனியே இரண்டு வழக்குகளைப் பதிவு செய்த கீழவளவு போலீஸார், பி.ஆர்.பி.யின் மகன் சுரேஷ்குமார், உறவினர்கள் தெய்வேந்திரன், ஆறுமுகம், அய்யப்பன் உள்பட 9 பேரைக் கைது செய்தனர். அவர்கள் ஒன்பது பேரும் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று (14 ஆம் தேதி) அண்ணாநகரில் உள்ள பி.ஆர்.பி.யின் வீட்டில் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். இதேபோல், உத்தங்குடியில் உள்ள தெய்வேந்திரன் வீடு, வெள்ளலூரில் உள்ள தத்துவராஜ் வீடு, மேலூரில் உள்ள ஆறுமுகம், அய்யப்பன், அனுமந்தன், ஜோதிபாசு ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடந்தது.

 பி.ஆர்.பி. மகன் சுரேஷ்குமாருக்கு 7 நாள் போலீஸ் கஸ்டடி? - தீர்ப்பு ஒத்தி வைப்பு!  ( படங்கள் )

இதில் சிலரது வீடுகளில் மட்டும் பத்திரங்கள், பட்டா மாறுதல் உத்தரவு உள்ளிட்ட சில ஆவணங்கள் சிக்கின.

##~~##
இதற்கிடையே, கிரானைட் வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, சுரேஷ்குமார் உள்ளிட்ட 5 பேரை மட்டும் 7 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கக் கோரி மேலூர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

இதற்காக இன்று பகல் 12.30 மணி அளவில் 5 பேரும் கோர்ட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். போலீஸாரின் மனுவை எதிர்த்து வாதாடிய பி.ஆர்.பி.யின் வழக்கறிஞர்கள் நாகராஜன், அன்புச்செழியன் ஆகியோர் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தனர்..

இந்நிலையில் உணவு இடைவேளைக்காக மதியம் 2 மணி அளவில் விவாதம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 3 மணிக்குத் தொடங்கிய விசாரணையின் போதும்,  தீவிரமான வாத பிரதிவாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு விசாரணையை முடித்த மாஜிஸ்திரேட், தீர்ப்பை திங்கட்கிழமை அறிவிப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சுரேஷ்குமார் உள்ளிட்ட 5 பேரும் மீண்டும் மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

 பி.ஆர்.பி. மகன் சுரேஷ்குமாருக்கு 7 நாள் போலீஸ் கஸ்டடி? - தீர்ப்பு ஒத்தி வைப்பு!  ( படங்கள் )

சுரேஷ்குமார் உள்ளிட்டவர்கள் திங்கட்கிழமை போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா. காளிமுத்து