Published:Updated:

வாக்கு எந்திரத்தில் 49 ஓ-வுக்கு பட்டன் கோரி வழக்கு

சென்னை, மார்ச்.3, 2011

யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ஓட்டுப்போட வசதியாக வாக்குப்பதிவு எந்திரத்தில் 49 ஓ-வுக்காக ஒரு 'பட்டன்' பொருத்த வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.##~~##

இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள் 49 (ஓ) என்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த நடைமுறையை செயல்படுத்துவதற்கு நீண்டநேரம் ஆகும். அத்துடன் ரகசியமும் பாதுகாக்கப்படமாட்டாது.

எனவே, தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மேற்பகுதி அல்லது அடிப்பகுதியில் புதிதாக ஒரு பொத்தானை பொருத்த வேண்டும்.

இந்த கோரிக்கையை, இந்திய தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு மனுவாக அனுப்பினேன். அதற்கு இதுவரை பதில் இல்லை. எனவே, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு