Published:Updated:

பஸ் டே-வை நிறுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, மார்ச்.3,2011

கல்லூரி மாணவர்கள் சட்டவிரோதமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பஸ் தினம் கொண்டாடுவதை தடுத்து நிறுத்த தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ##~~##

சென்னையைச் சேர்ந்த வழக்கறின் சுதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பஸ் தின கொண்டாட்டத்தின்போது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, பஸ் தின கொண்டாட்டத்தை தடை செய்ய வேண்டும் அல்லது ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் இந்த மனுவை விசாரித்து நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

அதில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடுகின்றனர். அப்போது, பஸ்சை நத்தை போல மெதுவாக ஓட்ட வேண்டும் என்று டிரைவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 60 பேர் செல்லக்கூடிய ஒரு பஸ்சில் 150 பேர் ஏறிச் செல்கின்றனர். பஸ்சின் ஜன்னல்களிலும், புட்போர்டுகளிலும் தொங்கிக் கொண்டு போகிறார்கள். பஸ் மேற்கூரையிலும் ஏறிச் செல்கின்றனர். இது, மோட்டார் வாகன சட்டத்தை மீறிய செயலாக உள்ளது என்று மனுதாரர் கூறியிருக்கிறார்.

பஸ் தின கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் முன்னிலையிலே மாணவர்கள் மதுபானம், சிகரெட்டு குடிப்பதோடு மட்டுமல்லாமல் சண்டையும் போட்டுக் கொள்கிறார்கள். இதனால் ஆங்காங்கே பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதனால் ஆயிரக்கணக்கான பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நல்லெண்ண அடிப்படையில் கொண்டாடப்படும் பஸ் தினம் என்ற கருத்துக்கு நேர்மாறாக இப்போதுள்ள மாணவர்கள் செயல்படுகின்றனர் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

எனவே, பொது இடங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் பஸ் தின கொண்டாட்டத்தை தடை செய்ய வேண்டும் அல்லது சரியான வழிகாட்டுதலின் பேரில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். இந்தப் பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் முன்பு அரசு வக்கீலுக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்க விரும்புகிறோம்.

பஸ் தின கொண்டாட்டத்தை தடுப்பதற்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுëத்துள்ளது என்பதை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். விவேகானந்தா கல்லூரியையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 3 வாரத்திற்கு தள்ளிவைக்கப்படுகிறது. இதற்கிடையில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பச்சையப்பன் கல்லூரி முதல்வர், மாநிலக் கல்லூரி முதல்வர், நநëதனம் அரசு கலைக் கல்லூரி முதல்வர், நிï கல்லூரி முதல்வர், விவேகானந்தா கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு பதில் மனுதாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பஸ் தினம் கொண்டாடுவதற்கு பிரதிவாதிகள் அனுமதிக்கக்கூடாது. கல்லூரி மாணவர்கள் சட்டவிரோதமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் பஸ் தினம் கொண்டாடுவதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை, கல்லூரிக் கல்வி இயக்குனர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி, கோர்ட்டு உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

அடுத்த கட்டுரைக்கு