Published:Updated:

திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் போதை பொருள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் போதை பொருள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் போதை பொருள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

##~~##
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் விமானம் மூலம் மலேசியாவுக்கு செல்வதற்காக
இன்று காலை அகமது ரஷீத்தும் ஒரு பெண்ணும் வந்தனர்.
அப்போது, சந்தேகத்தின் பேரில் 2 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  அப்போது, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது எத்ரீன் என்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதை பொருளை மலேசியாவுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.