Published:Updated:

11வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

11வது நாளாக தொடரும்  ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
11வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
11வது நாளாக தொடரும்  ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தம் 11வது நாளாக நீடித்து வருகிறது.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 மீனவர்களையும் விடுவிக்கக் கோரி கடந்த 16ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

##~~##
இந்த வேலை நிறுத்தத்தால் கடற்கரையில் 800க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள 19 பேரையும் விடுவிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி நடத்தி வரும் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 11வது நாளை எட்டியுள்ளது.