Published:Updated:

மண் சரிந்து 4 பேர் பலியான சம்பவம்: பஞ்சாயத்து தலைவர், மகன் உள்பட 3 பேர் கைது

மண் சரிந்து 4 பேர் பலியான சம்பவம்: பஞ்சாயத்து தலைவர், மகன் உள்பட 3 பேர் கைது
மண் சரிந்து 4 பேர் பலியான சம்பவம்: பஞ்சாயத்து தலைவர், மகன் உள்பட 3 பேர் கைது

திண்டிவனம்: திண்டிவனத்தில் மண் சரிந்து 4 பெண்கள் பலியான வழக்கில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சித் தலைவர், அவரது மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டிவனம் அருகே உள்ள பட்டனம் கிராமத்தைச் சேர்ந்த‌ 120 பேர் தினமும்  வேலைக்கு உணவு திட்டத்தில் பணிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேலானவர்களை அந்தக் கிராமத்தின் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தனது சொந்த வேலைகளை கவனிக்க பயன்படுத்தி வந்திருக்கிறார்.

மண் சரிந்து 4 பேர் பலியான சம்பவம்: பஞ்சாயத்து தலைவர், மகன் உள்பட 3 பேர் கைது

பூமிக்கு அடியில் சுரங்கம் போல் அமைத்து, அதற்குள் இருக்கும் மண்ணை அள்ளுவதற்கு வேலைக்கு உணவு திட்டத்திற்கு வந்த பெண்களை பயன்படுத்தி இருக்கிறார் முருகேசன்.

தினமும் 20 பேர் என கடந்த மூன்று  மாதங்களாக 15 அடி ஆழத்திற்கு மண்ணை அள்ளி இருக்கிறார்கள்.  நேற்று காலையும்  பெண்கள் அந்த சுரங்கத்திற்கு சென்று மண் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாரம் தாங்காமல் மேலே இருந்த மண் அவர்கள் மீது சரிந்துள்ளது.

இதில் நான்கு பெண்கள் மண்ணில் புதைந்து பலியாயினர். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு காரணமான அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், அவரது மகன் காமராஜ், பஞ்சாயத்து கிளார்க் பாஸ்கரன் ஆகியோரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இதனிடையே, பலியான 4 பேரின் குடும்பத்துக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் தமிழக அரசு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஆனால், பலியான 4 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டு்ம் என்று கோரியும் உடல்களை வாங்க மறுத்து திண்டிவனம் அரசு மருத்துவமனை முன்பு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-  நந்தக்குமார்