Published:Updated:

மதுரை: நில‌அபகரிப்பு வழக்குகளை விசாரித்த எஸ்.ஐ மர்ம மரணம்!

மதுரை: நில‌அபகரிப்பு வழக்குகளை விசாரித்த எஸ்.ஐ மர்ம மரணம்!
மதுரை: நில‌அபகரிப்பு வழக்குகளை விசாரித்த எஸ்.ஐ மர்ம மரணம்!
மதுரை: நில‌அபகரிப்பு வழக்குகளை விசாரித்த எஸ்.ஐ மர்ம மரணம்!

மதுரை: விருநகர் மாவட்ட நிலஅபகரிப்பு வழக்குகளை விசாரித்து வந்த எஸ்.ஐ. ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இற‌ந்து கிடந்த விவகாரம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.

மதுரை மாவட்டம் சமையநல்லூர் அருகே சமுத்திர நகரை சேர்ந்தவர் விஜயராமு. இவர் விருதுநகர் மாவட்ட நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்புப் பிரிவில் பணிபுரிந்தார். நேற்று இரவு டூட்டியில் இருந்தவர் வெளியில் சென்றார். அதன் பிறகு அவர் எங்கு போனார் என்று தெரியாத நிலையில் இன்று காலையில் மதுரை ஊமச்சிகுளம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளம் அருகே பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

##~~##
விஜயராமு ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது நில அபகரிப்பு புகாரில் சிக்கிய யாராவது அவரை அடித்துக் கொன்று தண்டவாளத்தில் வீசினார்களா என்று விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது மதுரை போலீஸ்!
 
  செ.சல்மான்.