Published:Updated:

திவாகரனை சந்தித்த அரசு வழக்கறிஞர் நீக்கம்

திவாகரனை சந்தித்த அரசு வழக்கறிஞர் நீக்கம்
திவாகரனை சந்தித்த அரசு வழக்கறிஞர் நீக்கம்
திவாகரனை சந்தித்த அரசு வழக்கறிஞர் நீக்கம்

திருவாரூர்: சசிகலாவின் சகோதரர் திவாகரனை சந்தித்ததால் திருவாரூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் அப்பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட அரசு வழக்கறிஞராக ஜீவானந்தம் என்பவர் நியமிக்கப்பட்டார். மீண்டும் திவாகரன் கைதுப் படலம் தொடங்கிய உடனே இவர் அந்த பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார். இவருக்கு பதிலாக சேரங்குளம் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்பவரை நியமித்திருக்கிறார் முதல்வர்.

இவர் பிராமணர் என்பதோடு திவாகரன் கட்சியில் ஐக்கியமாய் இருந்த போது கூட அவரை சென்று பார்க்காதவராம். அதோடு இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவரே இல்லையாம். இவரை பதவியில் நியமித்தது மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காமராஜிக்கே தெரியாதாம்.

##~~##
சம்பத்குமாரும் ஒரு மரியாதை நிமித்தமாக அமைச்சரை சந்திக்கவும் இல்லையாம். இருந்தும் கட்சியை சேர்ந்த சிலர் சம்பத்திடம் சொல்லி அமைச்சரை சந்திக்க சொன்னார்களாம். இதுவரை பதவியில் இருந்த ஜீவானந்தம் திவாகரனை சந்தித்தார் என உளவுப்பிரிவு தலைமையிடம் சொன்னதன் பேரில் தான் இந்த நடவடிக்கையாம்.
ஆரம்பத்திலிருந்து இதுவரை திவாகரனை சந்திக்காதவர்கள் யார் எனும் லிஸ்டை தலைமை உளவுப்பிரிவு கேட்டிருக்கிறதாம். அந்த அடிப்படையில் இதே பகுதியை சேர்ந்தவரும் தற்போது மாவட்ட விவசாய பிரிவு பதவியில் இருப்பவருடைய மகன் ஒருவரும் திவாகரனை சந்திக்காதவர்களாம். இவரைப் பற்றியும் உளவுப்பிரிவு தலைமையிடம் சொல்லி இருக்கிறதாம்.
வீ.மாணிக்கவாசகம்