Published:Updated:

மேற்கு வங்க மாவோயிஸ்ட் கோவையில் கைது

மேற்கு வங்க மாவோயிஸ்ட் கோவையில் கைது
மேற்கு வங்க மாவோயிஸ்ட் கோவையில் கைது
மேற்கு வங்க மாவோயிஸ்ட் கோவையில் கைது

சென்னை: மேற்குவங்க மாநிலத்தில் 27 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் கோவை அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் அணிசோல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம் சரண் டுடு. மாவோயிஸ்ட்டான இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு துணை ராணுவ மையம் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்.

இதில் முக்கிய குற்றவாளியான சாம் சரண் டுடுவை, கடந்த ஐந்து வருடமாக மேற்கு வங்க காவல் துறையினர் தேடி வந்தனர்.

##~~##
இந்த நிலையில், கோவை பீளமேட்டில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்தது. தண்ணீர் பந்தல் என்னும் இடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார்.
அவரைப் பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் சாம் சரண் டுடுவை கைது செய்து, தற்போது கோவையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சாம் சரண், நீதிமன்ற அனுமதியுடன் மேற்குவங்கத்துக்கு காவல்துறையினர் அழைத்து செல்கின்றனர்.