Published:Updated:

தேவர் ஜெயந்தி கலவரம்: பாதிக்கப்பட்டவர்கள் திடீர் போராட்டம்!

தேவர் ஜெயந்தி கலவரம்: பாதிக்கப்பட்டவர்கள் திடீர் போராட்டம்!
தேவர் ஜெயந்தி கலவரம்: பாதிக்கப்பட்டவர்கள் திடீர் போராட்டம்!

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவின்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு வேலை வழங்கக்கோரி திடீர் போராட்டம் நடத்தப்பட்டதால் ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தேவர் ஜெயந்தி கலவரம்: பாதிக்கப்பட்டவர்கள் திடீர் போராட்டம்!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா கடந்த அக்டோபர் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பசும்பொன்னுக்கு, தேவர் சமுதாயத்தினர் வந்திருந்தனர். பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க அவர்கள் செல்ல வேண்டிய வழித்தடம் பற்றி போலீஸார் முன்கூட்டிய அறிவித்திருந்தார்கள்.

தேவர் ஜெயந்தி கலவரம்: பாதிக்கப்பட்டவர்கள் திடீர் போராட்டம்!

இவ்வாறு அஞ்சலி செலுத்தச் சென்றவர்கள் சிலர் ஒரே காரில் மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். சிந்தாமணி, ரிங் ரோட்டில் அவர்கள் வந்தபோது, தவறான பாதையில் வருவதாகக் கூறி ஒரு கும்பல் காரை வழிமறித்தது. அப்போது 6 பேர் கொண்ட அந்த கும்பல் கார் மீது சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் அந்தக் காரில் பயணம் செய்த 17 பேர் உடல் கருகியது.

தேவர் ஜெயந்தி கலவரம்: பாதிக்கப்பட்டவர்கள் திடீர் போராட்டம்!

அவர்கள் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தமிழக அரசின் செலவில் அப்பல்லோ, மீனாட்சி மிஷன் போன்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் காயமடைந்தவர்களில் 7 பேர் அடுத்தடுத்து இறந்து போனார்கள். இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்தரவும் வழங்கப்பட்டது.

##~~##
அதேபோல, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால், இரண்டு, மூன்று முறை மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேறாததால் இன்று அவர்கள் திடீரென மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பங்கேற்றார்கள். அப்போது தீக்காயமடைந்த 5 இளைஞர்கள் சட்டையைக் கழற்றி, வெற்றுடம்புடன் கோஷமிட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்களைச் சந்தித்த கலெக்டர், உங்கள் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

-கே.கே.மகேஷ்
படங்கள்:
பா.காளிமுத்து