Published:Updated:

சந்தேஷ் வழக்கில் டிராமா போடுகிறதா போலீஸ்? - ஒன்றரை ஆண்டுகளாக விலகாத மர்மம்!

சந்தேஷ் வழக்கில் டிராமா போடுகிறதா போலீஸ்? - ஒன்றரை ஆண்டுகளாக விலகாத மர்மம்!
சந்தேஷ் வழக்கில் டிராமா போடுகிறதா போலீஸ்? - ஒன்றரை ஆண்டுகளாக விலகாத மர்மம்!
கிருஷ்ணகிரி: வெளியில் போகும் நம் வீட்டுப் பிள்ளைகள்  சில மணி நேரம் லேட்டாக வந்தாலே பதறி விடுகிறோம். ஆனால், காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தரும்படி ஒன்றரை வருடங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் ஒரு பாசத் தந்தை.
சந்தேஷ் வழக்கில் டிராமா போடுகிறதா போலீஸ்? - ஒன்றரை ஆண்டுகளாக விலகாத மர்மம்!
ஓசூர், காந்தி நகரில் வசிப்பவர் சுஷில் மண்டல். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிழைப்புக்காக 21 ஆண் டுகளுக்கு முன்பு ஓசூர் வந்தார். இவருக்கு சந்தேஷ், சந்தீப் என இரண்டு மகன்கள். இருவரும் ஓசூர் சிப்காட் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்து வந்தனர். மூத்த மகனான சந்தேஷ் 2011 ல் ப்ளஸ் ஒன் படித்தார். அந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சந்தேஷ், ‘ஸ்டேஷனரி வாங்குவதற்காக‌ கடைக்கு சென் றுள்ளார். அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய பெற்றோர் மறுநாள் சிப்காட் போலீஸுக்கு போயிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் அலைய விட்ட போலீஸார் 18 ஆம் தேதி வழக்கு போட்டிருக்கிறார்கள். 
அதன்பிறகு காவல்துறையால் மண்டல்  அனுபவித்தது கொஞ்சநஞ்ச அலைச்சல் அல்ல. அதை விகடன் டாட் காமில் விவரித்த மண்டல், ‘‘எஃப்.ஐ.ஆர் போட்டு போலீஸ் தேட ஆரம்பிச்ச சில நாட்கள்லேயே எங்களுக்கு சில தகவல்கள் கிடைச்சது. அருகில் ராஜாஜி நகரிலுள்ள டீச்சர் ஹேமலதாவிடம் எங்க மகன் சந்தேஷ் மூணு வருஷமா டியூசன் போனான். அப்போ டீச்சரின் ஒரே மகளான முனிஷாவுக்கும் சந்தேஷுக்கும் காதல் ஏற்பட்டிருக்கு. இது என் மனை விக்குக் கூட அரசல் புரசலா தெரிஞ்சிருக்கு. ஆனா, அவன் காணாமப் போன பிறகு தான் எனக்கு இது தெரிஞ்சது. 
மேலும், சந்தேஷும் முனிஷாவும்  பறிமாறிக்கிட்ட லல் லெட்டர், ரெண்டு பேரும் ஒண்ணா எடுத்திக்கிட்ட போட்டோ எல்லாம் கிடைச்சது. இதையெல்லாம் வச்சு நான் விசாரிச்சதுல, முனிஷாவின் அப்பா ராஜ்குமாரால் தான் என் மகன் காணாமப் போனான்னு தெரிஞ்சுக்கிட்டேன். அவர் மத்திய கலால் துறையில் ஓசூரில் இன்ஸ்பெக்டரா இருக்கார். தகுதி, வசதி அடிப்படையில் தன் மகளின் காதலை ஏற்க மறுத்த ராஜ்குமார் ஆத்திரத்தில் என் மகனை கடத்தியி ருக்கார். இதை எஃப்.ஐ.ஆரில் சேர்க்கச் சொல்லி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் நடையா நடந்துதான் சேர்க்க வைச்சேன்.
சந்தேஷ் வழக்கில் டிராமா போடுகிறதா போலீஸ்? - ஒன்றரை ஆண்டுகளாக விலகாத மர்மம்!
ஆனாலும், அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அவர் தன் செல்வாக்கை பயன்படுத்தி போலீஸை கைக் குள்ள வைச்சுக்கிட்டு, நடவடிக்கை எடுக்கவிடாம‌ தடுத்துக்கிட்டே வந்தார். அத்தோடு என்னிடம், ‘விவகாரத்தை மறந்துடு, எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்’னு பேரம் பேசினார். அவருக்கு சாதகமா சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐயான ரவியும் என்னை மிரட்டி பணிய வைக்கப் பார்த்தார். இதையெல்லாம் தமிழக அரசுக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மனுவாக அனுப்பியும் எனக்கு பலன் கிடைக்கலை. அதனால 2011 டிசம்பரில் ஆட்கொணர்வு மனு போட்டேன். அதன்பிறகும் ஒப்புக்காக தேடிவிட்டு வடமாநிலங்களில் தொடர்ந்து தேடிக்கிட்டு இருப்பதாக ரெண்டு முறை உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தந்தது போலீஸ். இதனால் கடுப்பான நீதிபதிகள் போலீஸை க‌டுமையாக கண்டிச்சு அனுப்பினாங்க. அதோடு, ‘சிறுவனை கொண்டுவரும் வரை கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி தினசரி உயர்நீதி மன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போட விருப்பமா?’னு கேட்டாங்க.
அந்த நெருக்கடியால 2011 அக்டோபர் 24 ல் ஓசூர் தர்கா ஏரியில் கண்டுபிடிச்சு அடக்கம் செய்யப்பட்ட அனாதைப் பிணம் தான் என் மகன் சந்தேஷ்னு  அறிக்கை தயார் பண்ணி ஒரு நாடகம் போட்டாங்க. என் மகன் காணாமப் போன நாள்ல இருந்து ஓசூர் வட்டாரத்தில் எங்கே யார் கொலையான தகவல் தெரிஞ்சாலும் நான் நேரில் போய் அந்த சடலங்களை பார்த்து வருவேன். இந்த நிலையில் 40 வயசுக்கு மேற்பட்ட அந்த சடலத்தை என் மகன்னு ஏமாத்தப் பார்த்தாங்க. இது தெரிஞ்சு, அந்த சடலத்தின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உள்ள வயசு ஆதாரத்தோடு நான் கோர்ட்டுக்குப் போனேன். 
சந்தேஷ் வழக்கில் டிராமா போடுகிறதா போலீஸ்? - ஒன்றரை ஆண்டுகளாக விலகாத மர்மம்!
இதுக்கு இடையில், சென்னை தடயவியல் துறை அதிகாரி ரவிசங்கர் என்பவர் என்னிடம், ‘நீ சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐ என எங்கே போனாலும் அவங்களும் என்கிட்ட தான் வந்து ரிப்போர்ட் கேட்பாங்க. உனக்கு சாதகமா நான் அறிக்கை தரமாட்டேன். அதனால, இந்தமுறை போலீஸ் சொல்லுறதை ஏத்துக்கிட்டு வழக்கை கைவிட்டுடு’னு வற் புறுத்தினார். ‘எனக்கு என் மகன் வேணும்’ங்கிற கோரிக்கையோடு கோர்ட்டுக்கு போனேன். போலீஸாரின் வேஷம் வெளுத்துப் போக..நீதிபதிகள் கே.என்.பாஷா, தேவ்தாஸ் இருவரும் போலீஸை கண்டிச்சுட்டு சி.பி.சி.ஐ.டி போலீஸிடம் வழக்கை ஒப்படைச்சிட்டாங்க‌. 
சேலம் மண்டல சி.பி.சி.ஐ.டி பிரிவின் டி.எஸ்.பியான ராஜன் தலைமையில் விசாரணை நடந்துச்சு. திடீர்னு ஒரு நாள் நவீன்குமார் என்ற எங்க எதிர்வீட்டு பையன் மூக்கண்டப்பள்ளி வி.ஏ.ஓவுடன் டி.எஸ்.பியிடம் சரணடைஞ்சதா தகவல் வந்துச்சு. முனிஷாவை அந்தப் பையனும், எங்க சந்தேஷும் லவ் பண்ணினதாகவும் இந்த தகராறில் நவீன்குமார் தர்கா ஏரியில் சந்தேஷை தள்ளிவிட்டு கொலை செஞ்சதாகவும் அவனே வாக்குமூலம் கொடுத்திருக்கான். அதை வச்சுக் கிட்டு, ஏற்கெனவே லோக்கல் போலீஸ் கோர்ட்டில் குறிப்பிட்ட அதே 40 வயசுள்ள சடலத்தை எங்க சந்தேஷ்னு சி.பி.சி.ஐ.டியும் சொல்லுச்சு. இதுக்கிடையில் ஓசூர் போலீஸ் ரெக்கார்டில் அனாதை பிணங்களாக கடந்த ரெண்டு வருஷத்தில் பதிவான தகவல்களில் சிலவற்றை போலீஸாரே அழிச்சிருக்காங்க. என்னோட வழக்குக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லாம குழப்பம் உண்டாக்கணும்னு சில போலீஸார் செஞ்ச இந்த மோசடி வெளியில் தெரிஞ்சு அதுக்காக 10 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டாங்க.
இதெல்லாம்  நீதிபதிகளுக்கும் தெரிஞ்சதால சி.பி.சி.ஐ.டி அறிக்கையையும் அவங்க ஏற்க மறுத்து கடந்த 1 ஆம் தேதி சி.பி.ஐயிடம் கேஸை ஒப்படைச்சிருக்காங்க. டி.எஸ்.பி அந்தஸ்துள்ள அதிகாரி தலைமையில் அனைத்து விசாரணை களும் புதிதாக நடத்தப்படணும்னு சொல்லியிருக்காங்க. முனிஷாவின் தந்தை ராஜ்குமாரின் கஸ்டடியில் எங்க மகன் சந்தேஷ் இன்னும் உயிரோடு இருப்பதாகவே நம்புறோம். சி.பி.ஐ தான் எங்க மகனை கண்டுபிடிச்சு தரணும்..’’ என்றார் சோகத்துடன். 
சந்தேஷ்  மர்மத்தை சி.பி.ஐயாவது உடைக்கட்டும்.
-எஸ்.ராஜாசெல்லம்