Published:Updated:

அட்டாக் பாண்டி சகோதரி மீது மோசடி வழக்கு!

அட்டாக் பாண்டி சகோதரி  மீது மோசடி வழக்கு!
அட்டாக் பாண்டி சகோதரி மீது மோசடி வழக்கு!
அட்டாக் பாண்டி சகோதரி  மீது மோசடி வழக்கு!

மதுரை: தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும், அழகிரியின் வலதுகரமுமான பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீஸ் தேடும் அட்டாக் பாண்டி இன்னும் சிக்காத நிலையில்,  அவரது சகோதரி உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் அட்டாக் பாண்டி என்ற வி.பி.பாண்டி. முன்னாள் வேளாண் விற்பனைக் குழு தலைவரான இவர், தி.மு.க.வில் தொண்டரணி நிர்வாகியாகவும் இருக்கிறார். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட‌ வழக்கு களில் தொடர்புடைய இவர், கடைசியாக சிக்கியது பொட்டு சுரேஷ் கொலையில்! 

அட்டாக்கை 9 தனிப்படை போலீஸார் தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது மூத்த சகோதரி பஞ்சு பாண்டியம்மாள் மீது, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு கால னியைச் சேர்ந்த சக்தி என்பவர் இன்று ஒரு புகார் கொடுத்தார்.

"என்னுடைய சொத்து பத்திரங்களை அட்டாக் பாண்டியின் அக்காள் பஞ்சு பாண்டியம்மாளிடம் அடகு வைத்து கடன் வாங்கினேன். அந்தத் தொகையை வட்டியுடன் முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஆனால், சொத்துப் பத்திரத்தைக் கொடுக்க பஞ்சு பாண்டியம்மாள் மறுத்துவிட்டார். மேலும், கடன் தொகையை தரவில்லை என்று கூறி, மேலும் 10 லட்சம்

##~~##
கேட்டு மிரட்டுகிறார்" என்பது சக்தியின் புகார். இந்தப் புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸார் பஞ்சு பாண்டியம்மாள் மற்றும் அவரது உறவுப்பெண்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அட்டாக் பாண்டியின் மற்றொரு அக்காள் மகன் விஜயபாண்டி ஏற்கெனவே பொட்டு கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-கே.கே.மகேஷ்