Published:Updated:

ரூ.15 ஆயிரத்துக்கு போலி பட்டா விநியோகித்த அரசு ஊழியர் உள்பட 3 பேர் கைது

ரூ.15 ஆயிரத்துக்கு போலி பட்டா விநியோகித்த அரசு ஊழியர் உள்பட 3 பேர் கைது
ரூ.15 ஆயிரத்துக்கு போலி பட்டா விநியோகித்த அரசு ஊழியர் உள்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் போலி பட்டா தயாரித்து விநியோகித்த அரசு தாலுகா நில அளவை உதவியாளர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம் ஏ.கலையம்புத்தூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரிடம் இலவச  வீட்டு மனைப் பட்டா வாங்கித் தருவதாகச் சொல்லி, நில அளவை உதவியாளர் ராஜேந்திரன், மனித உரிமைக்கழக அமைப்பாளர் தில்லை மணி, மற்றும் பத்திர எழுத்தர் நாகராஜன் ஆகிய மூவரும் 15 ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கின்றனர். அவர்களிடம் 10 ஆயிரம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்திருக்கிறார், மணிகண்டன்.

##~~##
கடந்த மாதம், இவர்கள் மூன்று பேரும் தாசில்தார் கையெழுத்து, அரசு முத்திரையுடன் கூடிய ஆவணங்களை மணிகண்டனிடம் பட்டா என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஆவணத்தில் குறிப்பிட்டிருந்த இடத்தைச் சென்று பார்த்த போதுதான் அந்த சர்வே எண் போலி என்று மணிகண்டனுக்குத் தெரிந்தது.
தாலுகா அலுவலகத்திலும் அதை உறுதிப்படுதிக்கொண்ட மணிகண்டன், டி.ஜி.பி.க்கு மனு அனுப்பி இருக்கிறார். அவரது மனு திண்டுக்கல் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடந்தது.
இதில் ராஜேந்திரன், தில்லை, மணி, நாகராஜன் ஆகிய மூவரும் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாண்டியன் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
ஜி.பிரபு