Published:Updated:

ஊடுருவல் பிரச்னை: சீனா செல்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்

ஊடுருவல் பிரச்னை: சீனா செல்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்
ஊடுருவல் பிரச்னை: சீனா செல்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்
ஊடுருவல் பிரச்னை: சீனா செல்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்

புதுடெல்லி: லடாக் பகுதிக்குள் சீன படையினர் ஊடுருவியதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வருகிற 9 ஆம் தேதியன்று சீனா செல்கிறார்.

காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் தவுலத் பெக் ஆல்டி பகுதிக்குள் சீன ராணுவத்தினர் கடந்த 15 ம் தேதி ஊடுருவி அங்கு கூடாரம் அமைத்து முகாமிட்டனர். இதனை அடுத்து சீனாவின் அத்துமீறல் குறித்து இந்தியா-சீனா இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் சீன ராணுவம் மீண்டும் இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்தது. சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 100 கி.மீ. தூரத்தில் உள்ள சுமர் என்ற இடத்தில் இந்திய வான் பகுதியில் அத்து மீறிப் பறந்தன. அவை சில மணி நேரங்கள் இந்திய வான் பகுதியில் பறந்து வட்டமடித்ததாகவும் அங்கு உணவு பொட்டலங்கள், சிகரெட் பாக்கெட்டுகள், சீன மொழியில் எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவற்றை போட்டு விட்டு திரும்பி விட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் எல்லைப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இரு நாடு ராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே மூன்றாவது கொடி கூட்டம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வருகிற 9 ஆம் தேதியன்று சீனா செல்கிறார்.டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரையறை விஷயத்தில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார்.