Published:Updated:

சீனா ஊடுருவல் விவகாரத்திற்கு தீர்வு காண பேச்சு வார்த்தை நடைபெறுகிறது: அந்தோணி

புதுடெல்லி: சீன படையினரின் ஊடுவல் விவகாரத்திற்கு: அமைதியான முறையில் தீர்வு காண பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் உள்ள தவுலத் பெக் ஆல்டி பகுதிக்குள் சீன ராணுவம் 10 கிலோ மீட்டர் தூரம் அத்துமீறி ஊடுருவி கூடாரம் அமைத்து உள்ளது. ஆனால் தங்கள் ராணுவம் இந்திய பகுதிக்குள் ஊடுருவவில்லை என்றும், அது தங்கள் பகுதிதான் என்பதால் அங்கிருந்து திரும்பிச்செல்ல முடியாது என்றும் சீனா கூறி வருகிறது.

இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சீன ராணுவம் ஊடுருவியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

##~~##
இந்நிலையில், இப்பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பாதுகாப்புத் துறை மந்திரி ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.