Published:Updated:

சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முடியும்: மன்மோகன் சிங்

சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முடியும்: மன்மோகன் சிங்
சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முடியும்: மன்மோகன் சிங்
சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முடியும்: மன்மோகன் சிங்

புதுடெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு தீர்வுகாண முடியும் என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன படையினர் முதலில் 10 கி.மீ தூரம் ஊடுருவியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 19 கி.மீ. வரை ஊடுருவி இருப்பதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

##~~##
இந்நிலையில் இது ஒரு உள்மட்ட அளவிலான பிரசனைதான் என்றும், இதனை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை தமது அரசுக்கு உள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நாம் இப்பிரச்னையை கையாள்வது குறித்து திட்டமிட்டுள்ளோம். இதற்கு அதிக அழுத்தம் கொடுத்து பிரச்னையை ஏற்படுத்த விரும்பவில்லை. இதனை சுமூகமாகவே தீர்க்க விரும்புகிறோம். இது குறித்த பேச்சு இருநாட்டு தலைவர்களுக்கு இடையே நடந்து கொண்டிருக்கிறது என்று மன்மோகன் சிங் மேலும் கூறினார்.