Published:Updated:

தொடர்ந்து கோமா நிலையில் சரப்ஜித் சிங்... குடும்பத்திற்கு விசா வழங்கியது பாக்.!

அமிர்தசரஸ்: உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சரப்ஜித் சிங்கை நேரில் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் விசா வழங்கி உள்ளது.

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சரப்ஜித் சிங், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை நேற்று சக கைதிகள் சிலர் கண்மூடித்தனமாகத் தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த சரப்ஜித் சிங், சுயநினைவு இல்லாமல் உயிருக்குப் போராடி வருகிறார்.

சரப்ஜித் சிங் தாக்கப்பட்டது குறித்து அறிந்ததும், இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரைப் பார்க்க பாகிஸ்தான் செல்ல துடித்தனர்.

##~~##
இதனையடுத்து அவர்கள், தங்களுக்கு விசா வழங்க வேண்டும் என்று கோரி அதற்கான கடிதத்தை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அளித்தனர்.
அவரது வேண்டுகோளை பரிசீலித்த பாகிஸ்தான் அரசு, விசா வழங்கி உள்ளது.இதனையடுத்து அவர்கள் பாகிஸ்தான் விரைகின்றர்.