Published:Updated:

போலி ஆவணங்கள் கொடுத்து, வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியவர் கைது

போலி ஆவணங்கள் கொடுத்து, வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியவர் கைது
போலி ஆவணங்கள் கொடுத்து, வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியவர் கைது
போலி ஆவணங்கள் கொடுத்து, வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியவர் கைது

சென்னை: சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் போலியான வங்கி மற்றும் விலாச ஆவணங்களை கொடுத்து தவணை முறையில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, அண்ணா சாலையில் இயங்கி வரும் பஜாஜ் ஃபின் செர்வ் லிமிடெட் என்ற பைனான்ஸ் கம்பெனியின் துணை மேலாளர் செந்தில்குமரன், சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஜார்ஜிடம் கொடுத்த புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவில், 'வீட்டு உபயோக பொருட்களை கடனில் வாங்க தங்கள் கம்பெனியை கிருஷ்ணமூர்த்தி என்பவர் அணுகினார். அவர் கடன் பெறுவதற்கு வேண்டிய ஆவணங்களான வங்கி ஸ்டேட்மெண்ட், விலாச ஆவணங்கள் முதலானவையும் கொண்டு வந்தார். அவர் கொடுத்த ஆவணங்களின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவருக்கு கடன் தரவில்லை.

##~~##
பின்னர் வங்கியில் விசாரணை செய்த போது அவர் போலியான ஸ்டேட்மெண்ட் கொடுத்து கடன் பெற முயன்றது தெரியவந்தது. மேலும் எங்கள் கம்பெனியின் ஆவணங்களை சரி பார்த்தபோது இதே நபர் பல பெயர்களில் பல விலாசங்கள் மற்றும் போலி வங்கி ஸ்டேட்மெண்ட் கொடுத்து ஏற்கனவே கடன் பெற்று கடனை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியிருந்தது தெரியவந்தது ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, புகார் மனுவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், உத்தரவிட்டதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், போலி ஆவணங்களை கொடுத்து கடன் பெற்று ஏமாற்றியவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது. அவர் சென்னை துரைப்பாகத்தில் ஒருவரது வீட்டிற்கு வரவிருக்கும் தகவலும் கிடைத்தது. இந்த தகவல்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் துறைப்பாக்கத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.