Published:Updated:

தமிழகம் முழுவதும் உணவகங்கள் வேலை நிறுத்தம் (படங்கள்)

தமிழகம் முழுவதும் உணவகங்கள் வேலை நிறுத்தம் (படங்கள்)
தமிழகம் முழுவதும் உணவகங்கள் வேலை நிறுத்தம் (படங்கள்)

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சேவை வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் உணவகங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
 

தமிழகம் முழுவதும் உணவகங்கள் வேலை நிறுத்தம் (படங்கள்)

உணவகங்கள் மீது மத்திய  அரசு விதித்துள்ள இரட்டை வரியான சேவை வரியை திரும்ப பெறற வேண்டும், மத்திய அரசு எதேச்சையாக அறிவித்துள்ள உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், சில்லரை தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் வணிகர் இன்னலுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி சென்னை ஓட்டல்கள் சங்கமும், அகில இந்திய ஓட்டல்கள் சங்கமும் இணைந்து ஒன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
 

தமிழகம் முழுவதும் உணவகங்கள் வேலை நிறுத்தம் (படங்கள்)


சென்னையில் சரவண பவன், வசந்த பவன், நியூ நீலா பவன் உள்ளிட்ட முக்கிய ஓட்டல்கள் இந்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள 75 சதவீத ஓட்டல்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உணவகங்களை அடைத்துள்ளன.
 

தமிழகம் முழுவதும் உணவகங்கள் வேலை நிறுத்தம் (படங்கள்)

10 ஆயிரம் உணவகங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களும், பயணிகளும் மிகுந்த சிரமப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் உணவகங்கள் வேலை நிறுத்தம் (படங்கள்)

இது குறித்து சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசராஜா கூறுகையில், "குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்கள் 12.36 சதவீத சேவை வரியை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சேவை வரி நடைமுறைக்கு வந்துள்ளது. உணவகங்கள் சார்பில் ஏற்கனவே மாநில அரசுக்கு வாட் வரி செலுத்தி வருகிறோம். இந்தநிலையில் மத்திய அரசு குளிர்சாதன வசதியுடைய ஹோட்டல்களுக்கு சேவை வரி விதித்துள்ளது கண்டனத்துக்குரியது. இதனை ரத்து செய்ய வேண்டும்.

##~~##
மதுபான வசதி கொண்ட குளிர்சாகன உணவகங்களுக்கு மட்டுமே விதித்து வந்த இந்த சேவை வரி தற்போது உணவகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சுமார் 5,000 ஹோட்டல்களில் 1,000 ஹோட்டல்கள் குளிர்சாதன வசதி உடையவை. சேவை வரி விதித்துள்ளதால், சென்னையில் உள்ள சுமார் 1,000 குளிர்சாதன ஹோட்டல்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
 
தமிழகம் முழுவதும் உணவகங்கள் வேலை நிறுத்தம் (படங்கள்)

சென்னையில் உள்ள ஹோட்டல்களில் மட்டும் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சேவை வரியின் காரணமாக வர்த்தகத்தில் நிலவி வரும் சரிவு தொடர்ந்தால் சுமார் 20 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே உணவு பண்டங்களின் விலை உயர்ந்து, நடுத்தர மக்களின் வர்த்தகத்தை நாங்கள் இழந்து வரும் நிலையில் சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளதால் அதை மேலும் இழக்க நேரிடும். இதனால், மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சென்னையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும்" என்றார்.


படங்கள்: முத்துக்குமார், ஜெ.வேங்டகராஜ்