Published:Updated:

கெயில் எரிவாயுக் குழாய்: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை: கெயில் நிறுவன விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாட்டின் மேற்குப்பகுதி மாவட்டங்களான கோவை, தருமபுரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக கேரளாவில் இருந்து கர்நாடகத்துக்கு கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்கள் கொண்டு செல்லும் விவகாரத்தில், விவசாய நிலங்களின் வழியே கொண்டு செல்வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களை  அழைத்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய தமிழக அரசு, நெடுஞ் சாலைவழியே இந்தக் குழாய்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது கெயில் நிறுவனம்.

##~~##
இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிபதி நீதிபதி ராஜேஸ்வரன், கெயில் நிறுவனத்தின் கோரிக்கையின்படி தடை விதிக்க மறுத்ததுவிட்டது.அதே சமயம் இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.