Published:Updated:

குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 

குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 
குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 

இந்த இதழ்  ஜூனியர் விகடன்https://bit.ly/2zDHkyX

குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 

``தி.மு.க கூட்டணியில் வி.சி.க, ம.தி.மு.க இடம்பெறவில்லை’’ என்று துரைமுருகன் சொல்லியிருப்பதன் பின்னணியில் ஸ்டாலினின் பங்கு என்ன? மத்திய அரசின் ஆய்வு நாடகம் மீது `கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தால், மக்களைப் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறதா மத்திய அரசு? - ``பழி தீர்க்கும் மோடி, கதறித் துடிக்கும் டெல்டா!’’ எனும் தலைப்பில் ரகசியங்களை அவிழ்க்கிறார் கழுகார்.

குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 

``தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட பொருள்களை விநியோகித்துவரும் 'கிறிஸ்டி ஃபுட்ஸ்' நிறுவனம், இந்த கான்ட்ராக்டுகளுக்காக ரூ.2,400 கோடி லஞ்சம் கொடுத்திருப்பது வருமானவரித் துறையின் ஆவணங்களின் மூலம் அம்பலமாகியிருக்கிறது" என்றொரு தகவல் கசிந்து, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இதன் முழு பின்னணியுடன் முட்டையிலும் முறைகேடு செய்ததன் பின்னணியைச் சொல்கிறது 'லஞ்சம் மட்டுமே ரூ.2,400 கோடி! - சந்திக்கு வரும் சத்துணவு ஊழல்' எனும் அலசல் கட்டுரை.

குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 

ஒருகட்டத்தில், இசக்கி சங்கரைக் கொலை செய்ய முடிவுசெய்து, தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளான் ஐயப்பன். சில சிறுவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டபடி தாமிரபரணி ஆற்றில் சம்பவத்தை நிகழ்த்தினான்... - தமிழகத்தையே உலுக்கும் ஆணவக் கொலையை நிகழ்த்தப்பட்டதன் பின்புலத்தைச் சொல்கிறது, 'பள்ளி மாணவர்கள் செய்த ஆணவக்கொலை!' எனும் க்ரைம் செய்திக் கட்டுரை. 

குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 

நீலம், வர்தா, ஒக்கி, கஜா என வரிசையாகப் புயல்களால் பாதிக்கப்பட்டு, புயல் ஆபத்து மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இணைந்துவிட்டது. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தமிழ்நாட்டுக்குத் துளியும் தரப்படவில்லை. இதைப் புள்ளி விவரங்களுடன் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது, 'மோடியின் தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டம்... முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட தமிழகம்!' எனும் அலசல் கட்டுரை.

குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 

``கட்டுன துணியோட 10 நாளா பிச்சைக்காரங்கபோல இருக்கோம். ஹெலிகாப்டர்ல வந்து பார்க்கும் முதல்வருக்கு இதெல்லாம் தெரியுமா?" - கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கோபத்தின் ஒரு துளி இது. நாகையின் வேதனை, திருவாரூர் சோகம், புறக்கணிக்கப்பட்ட புதுக்கோட்டை என உண்மை நிலையையும், மின் ஊழியர்களின் அளப்பரிய பணிகளின் மேன்மையையும் உரக்கச் சொல்கிறது 'சொந்த கிராமத்தில் அகதிகளான சோகம்' எனும் கள நிலவரக் கட்டுரை.

குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 

குட்கா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றபத்திரிகையில், சுகாதாரத்துறை அமைச்சரின் பெயரையே சேர்க்கவில்லை. இதன் மூலம், குட்கா வழக்கைத் தனது அரசியல் சுய லாபத்துக்காக பி.ஜே.பி பயன்படுத்துகிறது என்கிற புகார்களை உறுதிசெய்கிறதா சி.பி.ஐ? - முழுமையான பின்னணியுடன் பல சந்தேகங்களை எழுப்புகிறது 'ஆதாரங்களை மறைக்கிறதா சி.பி.ஐ? - குட்கா குற்றபத்திரிகை பின்னணி!' எனும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 

"தேசிய அளவில் மாநிலங்களின் ஆட்சி நிர்வாகங்களைப் பார்க்கும்போது, 1967 - 2017 வரையிலான திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம், தமிழகத்தின் வளர்ச்சிக் காலம்." - இது, 'திராவிடத்தின் ஆண்டுகள்: தமிழகத்தின் அரசியல் மற்றும் நலன்' என்ற புத்தகத்தை எழுதிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான நாராயண் தனது பேட்டியின் இறுதியில் உதிர்த்த வாக்கியம். "இலவசங்கள் அல்ல... சமூக நலத் திட்டங்கள்!" எனும் தலைப்பிலான அந்தப் பேட்டி மிக முக்கியமான ஒன்று.

குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 

தனக்கு விசுவாசியாகவும் தம்பிதுரைக்குப் போட்டியாகவும் முனுசாமியால் உருவாக்கப்பட்டவர் அசோக்குமார். அ.தி.மு.க-வில் சாதாரண உறுப்பினராக இருந்த அசோக்குமாரை, தன் முயற்சியால் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கு சீட் பெற்றுக்கொடுத்து வெற்றியும் பெறவைத்தார் முனுசாமி. வெற்றிபெற்ற அசோக்குமார், கிருஷ்ணகிரி தொகுதிக்கு செய்தது என்ன? அவர் பாஸ் மார்க் ஆவது எடுத்தாரா?  என்பதை விரிவாகக் காட்டுகிறது 'என்ன செய்தார் எம்.பி? - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)' கள ஆய்வும் அலசலும்.

குற்றமும் பின்னணிகளும்: ஜூனியர் விகடனின் 8 ஹைலைட்ஸ்! 

இந்த வார ஜூனியர்  விகடன் இதழை வாங்க இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்கhttps://bit.ly/2SeSIrF