Published:Updated:

சரப்ஜித் தொடர்ந்து கவலைக்கிடம்: குடும்பத்தினர் இந்தியா திரும்பினர்

சரப்ஜித் தொடர்ந்து கவலைக்கிடம்: குடும்பத்தினர் இந்தியா திரும்பினர்
சரப்ஜித் தொடர்ந்து கவலைக்கிடம்: குடும்பத்தினர் இந்தியா திரும்பினர்
சரப்ஜித் தொடர்ந்து கவலைக்கிடம்: குடும்பத்தினர் இந்தியா திரும்பினர்

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் கவலைக்கிடமாக இருப்பதால், மருத்துவ ஆலோசனை கேட்பதற்காக, லாகூரில் இருந்து இன்று சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் இந்தியா வந்தனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சக கைதிகள் சிலர் கடந்த வாரம் கொடூரமாக தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

தற்போது, லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சரப்ஜித் சிங்கை, மருத்துக் கல்லூரி முதல்வர் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், லாகூரில் உள்ள சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்பிரீத் கவுர், சகோதரி தல்பீர் கவுர் மற்றும் சரப்ஜித் சிங்கின் 2 மகள்களும், இன்று வாகா எல்லை வழியாக இந்தியா வந்தடைந்தனர்.

##~~##
சரப்ஜித் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, இந்திய மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி கோரி, லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் வழக்கறிஞர் அவாஸ் ஷேக் தெரிவித்துள்ளார்.