Published:Updated:

சரப்ஜித் சிங் கைது முதல்... மரணம் வரை... சந்தித்த துயரங்கள்!

சரப்ஜித் சிங் கைது முதல்... மரணம் வரை... சந்தித்த துயரங்கள்!
சரப்ஜித் சிங் கைது முதல்... மரணம் வரை... சந்தித்த துயரங்கள்!
சரப்ஜித் சிங் கைது முதல்... மரணம் வரை... சந்தித்த துயரங்கள்!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரை சேர்ந்த சரப்ஜித் சிங், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கசூர் எல்லைப் பகுதிக்கு அருகே, இந்திய - பாகிஸ்தான் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு, பாகிஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், லாகூர், பைசல்பாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சரப்ஜித் சிங் காரணம் எனக் கூறி, 1991ஆம் ஆண்டு அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், தூக்குத் தண்டனையை உறுதியானது.

2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப்பிடம், சரப்ஜித் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வந்த சரப்ஜித் சிங்குக்கு கருணை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று, அவரைத் தூக்கிலிடுவதை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது.

2009ஆம் ஆண்டு டிசம்பரில், இங்கிலந்து வழக்கறிஞர் ஒருவர், சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்.
 

சரப்ஜித் சிங் கைது முதல்... மரணம் வரை... சந்தித்த துயரங்கள்!

2012ஆம் ஆண்டு மே மாதம் அதிபர் ஆசிப் அலி சர்தாரியிடம், சரப்ஜித் சிங் சார்பில் கருணை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் மனு மீதான விசாரணைக்கு பின்னர், சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால், சில நாட்களில், சரப்ஜித் சிங்கிற்கு பதிலாக மற்றொரு இந்திய கைதியை விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
 

சரப்ஜித் சிங் கைது முதல்... மரணம் வரை... சந்தித்த துயரங்கள்!

2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் அதிபர் ஆசிப் அலி சர்தாரியிடம், சரப்ஜித் சிங் கருணை மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி சிறைக்குள் சக கைதிகளால் சரப்ஜித் சிங் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் கோமா நிலைக்கு சென்றார் சரப்ஜித் சி்ங். இன்று அதிகாலை ஒரு மணி அளவில் உயிர் பிரிந்தது.

##~~##
பாகிஸ்தான் சிறையில் கடந்த 22 ஆண்டுகளாக தவித்து வந்த சரப்ஜித் சிங் சந்தித்த சவால்களும், ஏமாற்றங்களும் ஏராளம்.