Published:Updated:

சரப்ஜித் சிங் கொலை: பாகிஸ்தான் விசாரணை மேற்கொள்ள இந்தியா கோரிக்கை

சரப்ஜித் சிங் கொலை: பாகிஸ்தான் விசாரணை மேற்கொள்ள இந்தியா கோரிக்கை
சரப்ஜித் சிங் கொலை: பாகிஸ்தான் விசாரணை மேற்கொள்ள இந்தியா கோரிக்கை
சரப்ஜித் சிங் கொலை: பாகிஸ்தான் விசாரணை மேற்கொள்ள இந்தியா கோரிக்கை

புதுடெல்லி: சரப்ஜித் சிங் கொல்லப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் விசாரணை மேற்கொள்ள இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணம் அடைந்தார்.  இதனையடுத்து அவரது உடலை இந்தியா கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கோட் லாக்பட் சிறையில் கடுமையாக தாக்கப்பட்ட சரப்ஜித் சிங் மரணம் அடைந்ததற்கு எங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 

##~~##
இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது குறித்து உறுதி செய்ய நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது. 

மேலும், சிங்கின் குடும்பத்தினரது துக்கம் மற்றும் சோகத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். பாகிஸ்தான் அரசிடம், இந்தியாவில் சரப்ஜித் சிங்கிற்கு செய்ய வேண்டிய முறையான இறுதி சடங்குகள் குறித்து எடுத்து கூறி உடலை திரும்ப தர கோரி கேட்டுள்ளோம்" என்றும் தெரிவித்துள்ளது.