Published:Updated:

வீடு ஆக்கிரமிப்பு: விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கைது

வீடு ஆக்கிரமிப்பு: விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கைது
வீடு ஆக்கிரமிப்பு: விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கைது

கோவை: அடுத்தவர் வீட்டை ஆக்கிரமித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் தென்னரசு உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

##~~##
கோவை, ரத்தினபுரி, ஹட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கீதாராணி. பத்திர எழுத்தரான இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்  ஹட்கோ காலனியில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்றை ரூ.5.20 லட்சத்துக்கு வாங்கினார்.
பூட்டப்பட்டு இருந்த இந்த வீட்டின் பூட்டு உடைத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் தென்னரசு மற்றும் அவரது நண்பர்கள் தண்டபாணி, பட்டேல் பாலு ஆகியோர் ஆக்கிரமித்ததாக தெரிகிறது.
இது குறித்து ரத்தினபுரி போலீசில் கீதாராணி புகார் அளித்தார். அதில், தன் வீட்டின் பூட்டை உடைத்து அத்து மீறி நுழைந்து, வீட்டை ஆக்கிரமித்ததுடன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ரத்தினபுரி போலீசார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் தென்னரசு மற்றும் அவரது நண்பர்கள் தண்டபாணி, பட்டேல் பாலு ஆகியோரை கைது செய்தனர்.
ச.ஜெ.ரவி