Published:Updated:

மோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2SKmsgv

மோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!ஐந்து மாநிலத் தேர்தல்களையும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டத்தில் காங்கிரஸ் கை ஓங்கியிருக்கிறது.
அமித் ஷாவின் கோட்டையின்மீது, முதல் ஓட்டையைப் போட்டிருக்கிறது காங்கிரஸ். சங்பரிவாரங்களை காங்கிரஸின் காரியகர்த்தாக்கள் முறியடித்திருக்கிறார்கள். தவிர, காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவி ஏற்றதும் பெற்றிருக்கும் முதல் பெரிய வெற்றி இது. நரேந்திர மோடியைத் திருப்புமுனை பிரசாரகர் என்பார்கள். ஆனால், இந்த முறை அது பலன் அளிக்கவில்லை. தவிர, அவரிடம் பேசுவதற்கு இந்துத்துவாவைத் தவிர புதிதாக எதுவுமில்லை. - ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை அலசும் 'ஓங்கும் கை... மூழ்கும் தாமரை!' சொல்லும் செய்திகள் ஏராளம்.

மோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

...அதேசமயம், ராகுல் காந்திதான் பிரதமர் என்பதை ஏற்காதவரையில் எந்த முடிவும் எடுபடாது. மம்தா, சரத் பவார், சந்திரபாபு நாயுடு மூவருக்குமே பிரதமர் ஆசை இருக்கிறது. 'மீண்டும் மீண்டும் கூடிப் பேசுவோம்' என்று சொல்லியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. அப்படிப் பேசும்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டணி உறுதிபடக்கூடும்.  இப்போதைக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மூலமாக எதிர்க்கட்சிகள் பலம் பெற்றுள்ளன. - 'சரியும் சாம்ராஜ்ஜியம்... ஆட்டம் ஆரம்பம்' எனும் டெல்லி ரிப்போர்ட்டில் அனல்பறக்கும் அரசியல் கள நிலவரத்தை அறிய முடிகிறது. 

மோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

''சாராய ஆலை பணம், சுவிஸ் வங்கி ஆவணங்களில் மன்னார்குடி குடும்பம்... குறிப்பாக, சசிகலா பெயர் மீண்டும் அடிபடுகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதை மனதில் வைத்தே வருமான வரித் துறை மூலமாக அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு." இணைப்பு விஷயத்தில் தினகரன் தரப்பை சரிக்கட்டும் அதேநேரம், எடப்பாடியை எப்படி வழிக்குக் கொண்டுவருவார்கள் என்பதையும் 'சசிகலா, எடப்பாடிக்கு செக்?! - ஸ்விஸ் வங்கி டு ஸ்பிரிட் ஆலை வரை...' என விரிவாகச் சொல்லியிருக்கிறார் மிஸ்டர் கழுகு.

மோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

''ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகக் களத்தில் நின்று போராடுபவர்கள் நாங்கள். ஆனால், திரைத் துறையில் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பா.இரஞ்சித், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை மையப்படுத்தி அரசியலிலும் தலைவராக வளர்ந்துவிட முடியும் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இருக்கிறார்." - இப்படியாக, திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித்தின் அரசியல் அதிர்வுப் பேச்சுகுறித்து கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் சிலரின் கருத்து அடங்கிய 'இரஞ்சித் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து பேசட்டும்! - தடதடக்கும் தலைவர்கள்' எனும் தொகுப்பு வெவ்வேறு கோணங்களை முன்னிறுத்துகிறது.

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2SKmsgv

மோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

சொத்துக்குவிப்பு, குட்கா, நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு என்று தமிழக முதலமைச்சர் தொடங்கி, அமைச்சர்கள் வரை ஊழல் புகார்கள் குவிகின்றன. அந்த வரிசையில் சமீபத்தில், "வேலூரில் இருக்கும் ரூ.300 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறார்" என்ற புகாரில் சிக்கியுள்ளார், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி. இதில் தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பெயர்களும் அடிபடுகின்றன. இந்த விவகாரம், வேலூர் வட்டார அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபர பேச்சாகச் சுழன்றுகொண்டிருக்கிறது. இதன் பின்னணியைச் சொல்கிறது 'வேலூரில் ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு... அமைச்சர் வீரமணியுடன் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டு?' எனும் அலசல் கட்டுரை.

மோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

"சைவ சித்தாந்தப் பிரிவைச் சேராத ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் தியானமோ பிரசாரமோ செய்வதற்கு சட்டப்படி அனுமதி இல்லை. ஆனால், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அங்கு தியான நிகழ்ச்சி நடத்துவதற்கு மத்திய பி.ஜே.பி அரசு உள்நோக்கத்துடன் அனுமதி அளித்துள்ளது" என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வெவ்வேறு பார்வைகளை முன்வைக்கிறது, "வடநாட்டு வழிபாட்டு முறையைத் திணிக்கப் பார்க்கிறார்கள்!" எனும் செய்திக் கட்டுரை.

மோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

> ரஞ்சித் பேச்சு எதிரொலி... "பட்டியலின மக்கள் ரெண்டுபட்டால் பாசிச அரசுக்கும், ஆதிக்கக் கும்பலுக்கும்தான் கொண்டாட்டம்..!"

> 'பேட்ட' இசை வெளியீட்டு விழாக் காட்சிகளை முன்வைத்து...  "கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் இந்தக் கலாசாரத்தை இன்னமும் மோசமாக்கினார்கள். 'ஆன்மிக' ரஜினியும் இந்த வரிசையில் நிற்கிறார்!"

> , உசுரோட இருக்கும்போதே நம்ம சிலையை நல்லபடியா செஞ்சி வெச்சிடணும். இல்லேன்னா செத்ததுக்கு அப்புறம் வஞ்சம் தீர்ப்பானுங்க..! 

அரசியல் முதல் சினிமா வரை... சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் முக்கியப் பார்வையைத் தேர்ந்தெடுத்து வழங்குகிறது 'ஆஹான்' பகுதி. 

மோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால், "தமிழ்நாட்டில் ஒப்பந்தத் தொழிலாளர்களே கிடையாது என்று மின்வாரிய நிர்வாகம் கூறிவந்தது. 2008 முதலே, 'இங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களே இல்லை' என்று ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாதம்தோறும் ரிப்போர்ட் வாங்கிவந்தனர். ஆனால், கஜா புயல் வந்ததும், 'ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அழைத்துவாருங்கள்' என்று எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியதுதான் வேடிக்கை" என்று சொன்னார் நாகை மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஓர் ஒப்பந்தத் தொழிலாளி. - கொதிக்கும் மின் ஊழியர்கள் நிலையை ஆழமாக நோக்குகிறது 'ஒப்பந்தத் தொழிலாளர்களின் உயிர் மலிவானதா?' எனும் அலசல்.

மோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

புயலில் பாதித்த மக்களுக்காக வீடுகளைக் கட்டித்தருவோம் என்று சொல்லியிருக்கிறது அரசு. ஆனால், புயல் மீட்புப் பணிகளுக்காக பட்டுக்கோட்டை பகுதிக்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், தங்களது சொந்த முயற்சியில் கைக்காசைச் செலவழித்து, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு ரூ.17 லட்சம் செலவில் 117 கூரை வீடுகளை அமைத்துவருகிறார்கள். - ஓர் உதாரண முயற்சியைப் பதிவு செய்திருக்கிறது 'ரூ.17 லட்சம்... 117 கூரை வீடுகள்... சொந்தச் செலவில் கட்டித்தரும் அரசு அதிகாரிகள்!' எனும் செய்திக் கட்டுரை. 

மோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

'திருமாவளவனுக்கு அணை முக்கியமல்ல, அணிதான் முக்கியம்' - இப்படி பன்ச் வைத்துப் பேசியிருப்பவர், தமிழிசை. 'மேடத்துக்குத்தான் தமிழ்நாடு மீது எவ்ளோ அக்கறை' என அப்படியே அவரைத் தாண்டி, அந்த முகாம் பக்கம் எட்டிப்பார்த்தால்... ம்ம்க்கும்ம்! நாதஸ் திருந்த வாய்ப்பே இல்லை... ஹெச்.ராஜா முதல் மோடி வரை அலப்பறையை அரங்கேற்றுகிறார் ஐடியா அய்யனாரு!

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2rvQvNl
 
அடுத்த கட்டுரைக்கு