Published:Updated:

இந்தியா வந்தது சரப்ஜித்சிங் உடல்: சொந்த கிராமத்தில் இன்று தகனம்

இந்தியா வந்தது  சரப்ஜித்சிங் உடல்: சொந்த கிராமத்தில் இன்று தகனம்
இந்தியா வந்தது சரப்ஜித்சிங் உடல்: சொந்த கிராமத்தில் இன்று தகனம்

பாகிஸ்தான் சிறையில் கைதிகளால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த இந்தியர் சரப்ஜித் சிங்கின் உடல் தனி விமானம் மூலம் நேற்றிரவு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
 

இந்தியா வந்தது  சரப்ஜித்சிங் உடல்: சொந்த கிராமத்தில் இன்று தகனம்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங் (49) கடந்த 26ஆம் தேதி, லாகூர் சிறையில் சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், லாகூர் அரசு ஜின்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரப்ஜித் சிங் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து சரப்ஜித்சிங்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, சரப்ஜித்சிங்கின் உடல் ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது.
 

இந்தியா வந்தது  சரப்ஜித்சிங் உடல்: சொந்த கிராமத்தில் இன்று தகனம்

அங்கு உடலை, பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதல், மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சர் பிரனீத் கவுர் ஆகியோர் பெற்றுக்கொண்டார். சரப்ஜித்சிங்கின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது உடல் விமான நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

##~~##
அதன்பிறகு சரப்ஜித்சிங்கின் உடல், அவரது சொந்த ஊரான பிக்கிவிண்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு சரப்ஜித் சிங் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகல் முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது.