Published:Updated:

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!
அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2QKAy4P

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

** அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்! ***  

“இப்போது டெல்லியில் இருந்து வரும் டெரர் உத்தரவுகளால் அந்த இணைப்புப் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. அதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா என எல்லோரும் ஓரணியில் இணையும் காலம் வெகு தூரம் இல்லை...”

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!


 
“பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை ஏற்றுக்கொண்டு, முதல்வராகத் தொடர எடப்பாடி சம்மதம் தெரிவித்துள்ளார். அதனால்தான் சசிகலாவை எடப்பாடி தரப்பு விமர்சித்துப் பேசுவது இல்லை. ‘தினகரன் முரண்டுபிடித்தால் அவரைச் சரிக்கட்டிப் பார்க்கலாம். இல்லையென்றால் வேறு வழியைத் தேடவேண்டியதுதான்’ என்று எடப்பாடி தரப்பு சொல்லியுள்ளது. பி.ஜே.பி தரப்பில் அ.தி.மு.க-விடம் பேசியவர்களும், ‘நீங்கள் பி.ஜே.பி-யுடன் கூட்டணி பற்றி யோசிக்க வேண்டாம். இரு அணியினரும் இணைந்து தி.மு.க-வை வீழ்த்துங்கள். தேர்தலுக்குப் பிறகு மற்றதைப் பேசிக்கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்..”

- பலதரப்பட்ட சோர்ஸ்களில் இருந்து பெறப்பட்ட உள்ளரசியல் விவகாரங்களுடன் தகவல்களைத் தருகிறது 'டெல்லி கட்டளை... கட்டாய இணைப்பு - கண்டிஷன்ஸ் அப்ளை' சிறப்பு அரசியல் செய்திக் கட்டுரை.

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

எதிர்தரப்பிலிருந்து பத்து எம்.எல்.ஏ-க்களுக்கு குறி வைத்திருக்கிறார்கள். ‘இந்த ஆட்சி முடியும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம். இப்போதே ஏதேனும் செய்யலாம்’ என்று குடும்பத்தில் ஒரு தரப்பினர் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்கள். அவரும், ‘ஆகட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். முதல் இலக்கு, குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இதற்காக அவரது சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க முக்கியப் புள்ளி ஒருவர் ராமச்சந்திரனிடம் பேசிவருகிறாராம்...

- திமுக முகாமில் நடக்கும் வியூகங்களையும் முயற்சிகளையும் 'பத்து எம்.எல்.ஏ-க்களுக்கு குறி... தி.மு.க வேட்டை ஆரம்பம்' என்று சொல்லும் மிஸ்கர் கழுகு, ஓ.பி.எஸ்-ஸின் தம்பி நீக்கம், பொன்.மாணிக்கவேலுவுக்கு எதிரான புகார் முதலான விஷயங்களின் பின்னணியையும் அலசியிருக்கிறார். 

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

மொத்தம் 56 சாட்சிகளை விசாரித்திருக்கிறது சி.பி.ஐ. அந்த வாக்குமூலங்களைப் படித்தாலே சி.பி.ஐ-யின் மேம்போக்கான விசாரணை அப்பட்டமாகத் தெரியும். உதாரணத்துக்கு, நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் முத்துக்குமார் என்கிற முதல் நிலைக்காவலர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ‘சம்பவம் நடந்த 18-ம் தேதி இரவு 9 மணிக்கு இன்ஸ்பெக்டர் ராஜு போன் செய்து, திருச்செங்கோடு டி.எஸ்.பி ஆபிஸுக்கு வரச்சொன்னார். அங்கு சென்ற பிறகுதான் விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்ட விஷயம் தெரியும். நான் சென்றதும் ஒரு செல்போனை கையில் கொடுத்தார் இன்ஸ்பெக்டர் ராஜு.  நான் ஆன் செய்தேன். ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. மேலும், ‘விஷ்ணுப்ரியா தற்கொலை கடிதத்தில், இதில் சில விவரங்கள் இருப்பதாக எழுதியிருக்கிறார். அவர் கடைசியாக யாருடன் பேசினார் என்பது தெரிந்தால், தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிடலாம்’ என்று அவர் சொன்னார். 19-ம் தேதி, மாலை சுமார் 4 மணிக்கு டி.எஸ்.பி.ராஜு வந்தார். அவரிடம் நடந்த விவரங்களைச் சொன்னேன்’ என்று கூறியிருக்கிறார்...

-  கோவை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, சி.பி.ஐ விசாரணையைத் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இம்முறையாவது சி.பி.ஐ முறையாக விசாரித்து நியாயம் தேடித் தருமா? என்ற கேள்வியுடன் தகவல்களை அடுக்கிறது 'பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறதா சி.பி.ஐ? - மீண்டும் சூடுபிடிக்கும் விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கு...' எனும் செய்திக் கட்டுரை. 

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி சித்ரா, “எங்க சமூகத்துல வயசுப் பொண்ணுங்களைப் படிக்க அனுப்புறதே பெரிய விஷயம். தண்ணியில பாலம் மூழ்கிட்டதால, ‘ஸ்கூலுக்கெல்லாம் போக வேணாம்... படிப்பை நிறுத்திடு’ன்னு பெரியவங்க சொல்றாங்க. அடுத்த வருஷம் பத்தாவது போகப்போறேன். நான் படிக்கனும்ணு ஆசைப்படுறேன். இங்கு புதுசா பாலம் கட்டுனாதான் என் படிப்பு தொடரும். இங்கே இருக்கிற எல்லா பொம்பளைப் புள்ளைங்களுக்கும் இதுதான் நிலைமை. எப்படியாவது உதவி பண்ணுங்க ப்ளீஸ்...” என்றார் கலங்கிய கண்களுடன்.

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2QKAy4P

- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே லிங்காபுரம் கரந்தையாற்றில் கட்டப்பட்டிருந்த பாலம் தண்ணீரில் மூழ்கிவிட்டது. புதிய பாலம் கட்டப்படாததால், பள்ளிக் குழந்தைகள் உட்பட ஊர்மக்கள் அனைவரும் தினமும் உயிரைக் கையில் பிடித்துகொண்டு பரிசலில் பயணம் செய்யும் பதறவைக்கும் நிலையை நேரில் கண்டு 'பாலமும் இல்லை... பஸ்ஸும் இல்லை! - பரிசலில் பரிதவிக்கும் பள்ளிக் குழந்தைகள்' என ரிப்போர்ட் செய்திருக்கிறது ஜூ.வி. 

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

“சமூகக் கட்டமைப்புடன் வாழும் யானைக் கூட்டத்தை மூத்த பெண் யானைதான் வழிநடத்தும். அதன் கட்டளைகளின்படிதான், மற்ற யானைகள் நடந்துகொள்ளும். பலியான ஏழு யானைகளில் ஆறு பெண் யானைகள். இதன்மூலம் யானைக் கூட்டத்தைச் சிதறடித்து, தந்தத்துக்காக ஆண் யானையை வேட்டையாடவே இந்தச் சம்பவங்கள் நிகழ்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது...”

- தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வன உயிரினக் காப்பகத்தின் கிழக்கு சரகத்தில் சமீபத்தில் ஏழு யானைகள் அடுத்தடுத்து மரணமடைந்ததை முன்வைத்து சந்தேகங்களை எழுப்புகிறது “மேகமலையில் யானைகள் வேட்டை?” - வேடிக்கை பார்க்கும் வனத்துறை! எனும் செய்திக் கட்டுரை.

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

சிதம்பரம் ரயில் நிலைய ஆய்வுக்கு வந்திருந்த சந்திரகாசி எம்.பி-யை அங்கிருந்த கடைக்காரர் ஒருவர், “யார் நீங்க... என்ன வேணும்?” என்று கேட்டிருக்கிறார். “என்னைப் பார்த்தா யாருன்னு கேட்கிறே... நான் இந்தத் தொகுதி எம்.பி-ன்னு தெரியாதா?” என்று சந்திரகாசி எகிற... உடனே அதிகாரிகள் ஓடிவந்து சமாதானம் செய்துள்ளனர். வடிவேலு காமெடி போல, ‘நானும் எம்.பி-தான்’னு அறிமுகம் செய்துகொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறார் சந்திரகாசி. நாடாளுமன்றத்துக்குள் சந்திரகாசியை அனுப்பிவைத்த சிதம்பரம் தொகுதி, இந்த நாலரை ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்ததா? 

- இதோ 'என்ன செய்தார் எம்.பி?' வழக்கம்போலவே விரிவாக அலசி ஆராய்ந்து மதிப்பீடும் செய்துள்ளது. மேலேயுள்ள பாராவுக்குச் சொந்தக்காரரான சிதம்பரம் எம்.பி. சந்திரகாசி வாங்கிய மார்க்கை நோக்க யாருக்குதான் ஆர்வம் இருக்காது!

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக ‘மீண்டெழும் குமரி’ இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டுடன், மீண்டெழும் குமரி இயக்கத்தைச் சேர்ந்த தாமஸ் பிராங்கோ, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பி.ஜே.பி-யினருக்கும் மீண்டெழும் குமரி இயக்கத்தினருக்கும் இடையிலான மோதலாக இந்த விவகாரம் மாறியிருக்கிறது...

- கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரக்கும் விவகாரத்தின் பின்னணியையும், சம்பந்தப்பட்ட தரப்புகளின் ரியாக்‌ஷன்களையும் தருகிறது '2,000 கோடி ரூபாய் ஊழல்? - மத்திய அமைச்சருக்கு எதிராக திரளும் இயக்கங்கள்!' எனும் செய்தி அலசல்.

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டு, படுகொலை செய்யப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஹசீனா, ஜனநாயக மரபுகளை உதாசீனப்படுத்தி, சர்வாதிகாரியாகச் செயல் படுகிறார் என்பது அவர் மீது சுமத்தப்பட்டுள்ளக் குற்றச்சாட்டு. வங்கதேச மரபுப்படி, தேர்ந்தெடுக்கப் பட்ட அரசைக் கலைத்துவிட்டு, காபந்து அரசு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார், ஹசீனா...

வங்கதேசத்தின் அரசியல் சூழலையும், தேர்தல் நடக்கும் முறைகளையும் தெளிவுபட காட்டுகிறது ’ஹசீனாவா... காலிதாவா? - வங்கதேசத்தில் வாக்குப் போர்!’ எனும் அரசியல் அலசல்.

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

டி.வி நிகழ்ச்சி வழங்கும் ஒரு பெண்ணை அழைத்துவந்து பள்ளியில் நிகழ்ச்சி நடத்தி, அதற்காக ஆசிரியர்களிடம் பணம் வசூலித்தார். குறைந்த விலையில் நிலம் கொடுப்பதாகச் சொல்லி ஆசிரியர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றினார். ஆசிரியர் ஒருவர் எதிர்த்துப் பேசிவிட்டார் என்பதற்காக, மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை  டிரான்ஸ்பர் செய்ய வைத்துவிட்டார். ஆசிரியை ஒருவரை லாட்ஜுக்கு அழைத்துள்ளார். அமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதால், எதுவும் சொல்ல முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கிறார்கள்.

- “அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆளும் கட்சிக்காரர் செய்யும் அடாவடியை விரிவாகச் சொல்லியிருக்கும் செய்திக் கட்டுரை, 'கண்டுகொள்வாரா அமைச்சர்?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. 

அடாவடிகளும் அவலங்களும்: 5 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்!

‘2 ரூபாய் டாக்டர்’, ‘5 ரூபாய் டாக்டர்’ என்பதெல்லாம் அவருக்கு ஊடகங்கள் வைத்த பெயர். வட சென்னை மக்கள் ஜெயச்சந்திரனை தெய்வமாகத்தான் பார்த்தார்கள். அதனால்தான், ஒட்டுமொத்த வடசென்னையும் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியது.

- டாக்டர் ஜெயச்சந்திரனின் மேன்மையான நினைவலைகளை மீட்டெடுக்கும் 'மறைந்தார் மக்கள் மருத்துவர்!' எனும் அஞ்சலிக் கட்டுரையைத் தவறவிடாதீர்கள்.

இந்த வார ஜூன்யர்  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2PVjTWM

அடுத்த கட்டுரைக்கு