Published:Updated:

கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகை: 155 பேர் கைது

கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகை: 155 பேர் கைது
கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகை: 155 பேர் கைது

கோவை: கோவையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பிரிக்கால் நிறுவன தொழிலாளர்கள் 155 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் நிறுவனத்தில் ஏ.ஐ.சி.சி.டி.யூ தொழிற்சங்கம் அமைத்தற்காக கடந்த 2009ஆம் ஆண்டு 155 தொழிலாளார்கள் பணீ நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது முதல் கட்டமாக 50 தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது எனவும், பின் படிப்படியாக மற்ற தொழிலாளர்களை பணிக்கு எடுத்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பிரிக்கால் நிர்வாகம் தெரிவித்தபடி தொழிலாளர்களை பணிக்கு எடுத்து கொள்ளவில்லை. இதனையடுத்து தொழிலாளர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தியும் தொழிலாளர் துறை பிரிகால் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஏ.ஐ.சி.சி.டி.யூ அமைப்பினர் தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக பணியில் எடுத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

##~~##
தொழிற்சங்க அங்கீகார திருத்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும், பெண் தொழிலாளர் குறித்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும், ஆண்-பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும், பயிற்சி மற்றும் ஓப்பந்த தொழிலாளர் முறைகளை ஓழிக்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளும் முற்றுகை போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 155 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த முற்றுகை போராட்டம் காரணமாக தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
-ச.ஜெ.ரவி