Published:Updated:

மரக்காணம் கலவரத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க கோரி வழக்கு!

மரக்காணம் கலவரத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க கோரி வழக்கு!
மரக்காணம் கலவரத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க கோரி வழக்கு!
மரக்காணம் கலவரத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க கோரி வழக்கு!

சென்னை: மரக்காணம் கலவரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தர விட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வராகி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி சித்திரை திருவிழா என்ற பெயரில் பா.ம.க. சார்பில் கூட்டம் நடத்தினார்கள். அப்போது, கலவரம் வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்தன.

இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட கலவரம் காரணமாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பா.ம.க.வினரால் சேதப்படுத்தப்பட்டன. சில பேருந்துகள் எரிக்கப்பட்டன.

இதனால் கோடிக் கணக்கான ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தான் பொறுப்பு.

##~~##
எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த உத்தர விட வேண்டும். இந்த பிரச்சனையில் தற்போதுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து சொத்து சேதாரம் மதிப்பை கணக்கிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.