Published:Updated:

மரக்காணம் கலவர வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மரக்காணம் கலவர வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
மரக்காணம் கலவர வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
மரக்காணம் கலவர வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை : மரக்காணம் வன்முறை தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க கோரும் மனுவிற்கு பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர் வராகி என்பவர் உயர் நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்த மனுவில், சித்திரை முழு நிலவு விழா சமீபத்தில் நடந்த போது டாக்டர் ராமதாஸ், குரு ஆகியோரின் தூண்டுதலின் பேரில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. பொது சொத்து, தனியார் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தினர்.

இந்த சேதத்திற்கு அவர்கள் தான் பொறுப்பு. எனவே அவற்றை ராமதாஸ், குரு ஆகியோரிடம் இருந்து வசூலிக்க வேண்டும். சேதங்களை மதிப்பிடுவதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றம் அமைத்து கலவர வழக்குகளை துரிதமாக விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

##~~##
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, ஆறுமுகசாமி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் மூர்த்தி, சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை ஆகியோர் ஆஜராகினர். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயேந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, ராமதாஸ், குரு ஆகியோருக்கு மனுதாரர் தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் வழங்க அனுமதியளித்தனர்.