Published:Updated:

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ் விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ் விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ் விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ் விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது

சென்னை: எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பங்கள் விற்பனை இன்று துவங்கியது.

பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான இன்றே மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி துவங்கியது.

சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் வரும் 18ம் தேதி மதியம் 3 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தபாலில் விண்ணப்பம் பெற விரும்புவோர், அதற்குரிய விண்ணப்ப கடிதத்துடன், "செயலர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை -10' என்ற பெயரில், 500 ரூபாய்க்கு எடுக்கப்பட்ட டி.டி.யை கொடுத்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.

##~~##
எஸ்.சி.- எஸ்.டி. - எஸ்.சி.ஏ. பிரிவினர் விண்ணப்ப கடிதத்துடன், சான்றொப்பம் இடப்பட்ட, ஜாதி சான்றிதழின் இரு நகல்களை கொடுத்து, விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.