தொடரும் உயிர்ப்பலிகள்: பேன்சி ரக பட்டாசு உற்பத்திக்கு விரைவில் தடை வருமா?

விருதுநகர்: சிவகாசி பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ப்பலிகள் அதிகரித்து வருகின்றன.இதனால் வெடி விபத்துகளுக்கு காரணமான பேன்சி ரக பட்டாசுகளை தயாரிப்பதற்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் பரீசிலனை செய்து வருகிறது.

சிவகாசி அருகே முதலிப்பட்டியில் கடந்த நவம்பர் 5&ம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 40 பேர் பலியானார்கள். அந்த வெடி விபத்தின் துயரம் மறைவதற்குள் சிவகாசி பகுதியில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 12 வெடி விபத்துக்கள் ஏற்பட்டு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.

சிவகாசி பட்டாசு ஆலைகளில் நடக்கும் வெடி விபத்துக்களினால் ஏற்படும் உயிர் இழப்புகளால் அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து கடந்த 29&ம் தேதி விருதுநகர் கலெக்டர் ஹரிகரன் தலைமையில் போலீஸ், மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
##~~## |
படங்கள்:ஆர்.எம்.முத்துராஜ்