Published:Updated:

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு வருகிற 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, கோடை விடுமுறைக்கு பிறகு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக ஜெயலலிதாவின் முன்னாள் ஆடிட்டர் சண்முகம் வந்திருந்தார்.

அப்போது ஆஜரான ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், "நாங்கள் ஏற்கெனவே வருமானவரித் துறையினரிடம் சில ஆவணங்களை கேட்டிருந்தோம் அது இன்னும் வழங்கப்படவில்லை. ஆவணங்கள் வழங்கப்படும் வரை ஆடிட்டரை விசாரிக்க கூடாது" என வாதிட்டார்.

##~~##
ஜெயலலிதாவின் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா, வழக்கை வருகின்ற 20 ஆம்  தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-இரா.வினோத்