Published:Updated:

ஊட்டியில் 117வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்: சுற்றுலா பயணிகளை கவரும் 'தலைமை செயலகம்'

ஊட்டியில் 117வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்: சுற்றுலா பயணிகளை கவரும் 'தலைமை செயலகம்'
ஊட்டியில் 117வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்: சுற்றுலா பயணிகளை கவரும் 'தலைமை செயலகம்'

நீலகிரி: ஊட்டியில் 117 வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. இதில், 70 ஆயிரம் வகையான மலர்களை கொண்டு தமிழக அரசின் தலைமை செயலகம் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் 117வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்: சுற்றுலா பயணிகளை கவரும் 'தலைமை செயலகம்'

ஆண்டு தோறும் கோடை காலத்தில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 117 வது மலர் கண்காட்சி நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இன்று துவங்கியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 3 நாட்கள் நடக்கும் இந்த மலர் கண்காட்சியை, தமிழக வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் துவக்கி வைத்தார். மலர் கண் காட்சியை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயில் பகுதியில், 20 அடி உயரமும், 8 அடி அகலத்திற்கு லில்லியம் மலர்களை கொண்டு பிரமாண்ட வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.  இதுதவிர பூங்காவில் 4 இடங் களில் மலர்களால் ஆன அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் 117வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்: சுற்றுலா பயணிகளை கவரும் 'தலைமை செயலகம்'

கண்காட்சியையொட்டி, 20 அடி உயரம் 15 அடி அகலத்தில், 70 ஆயிரம் மலர்களுடன் தமிழக அரசின் தலைமை செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. கார்னேசன், ரோஜா உட்பட பல்வேறு மலர்களை கொண்டு தலைமை செயலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 அடி உயரம் 7 அடி விட்டத்தில், சுமார் 3 ஆயிரம் மலர்களைக் கொண்டு உலக உருண்டை அமைக்கப்பட்டுள்ளது.  இது தவிர 500 மலர்களை கொண்டு கங்காரு, பல்வேறு கொய்மலர்களை கொண்டு தமிழக அரசின் முத்திரை உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் 117வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்: சுற்றுலா பயணிகளை கவரும் 'தலைமை செயலகம்'

நெதர்லாந்தை பூர்வீகமாக கொண்ட துலிப்ஸ் மலர்கள், ஆஸ்திரேலியாவில் காணப்படும் புரோட்டிலியா மலர்கள் என உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலர்களும், ஊட்டி தாவரவியல் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு அரங்குகளின் தனியார் நிறுவனங்கள் சார்பில் மலர் அலங்காரங்கள் மற்றும் காய்கறி அலங்காரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

##~~##
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. பருவ மழை ஏமாற்றியதால் பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் போதிய அளவு மலர்கள் பூக்கவில்லை என்ற போதிலும், பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
ச.ஜெ.ரவி