Published:Updated:

`அன்புள்ள இந்தியர்களே, அபினந்தனுக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்!’ - பாகிஸ்தானியரின் ட்வீட்

`அன்புள்ள இந்தியர்களே, அபினந்தனுக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்!’ - பாகிஸ்தானியரின் ட்வீட்
`அன்புள்ள இந்தியர்களே, அபினந்தனுக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்!’ - பாகிஸ்தானியரின் ட்வீட்

பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தனின் வீடியோக் காட்சிகளும், புகைப்படங்களும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தநிலையில் இரு நாடுகளைச்சேர்ந்த சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்களும் இதுகுறித்த தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அபினந்தன் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்வதற்கு #Abhinandan என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது. 

`அன்புள்ள இந்தியர்களே, அபினந்தனுக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்!’ - பாகிஸ்தானியரின் ட்வீட்

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இதே ஹேஷ்டேக்கில் பாகிஸ்தானியர்களும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருவதுதான். இந்தியர்கள் தரப்பில், எதிரி நாட்டு ராணுவத்திடம் சிக்கியபின்பும், கூடுதல் தகவல்களைத் தர மறுத்த அபினந்தனின் தைரியத்தை இந்தியர்கள் பலரும் பாராட்டி சல்யூட் வைத்துள்ளனர்.

`அன்புள்ள இந்தியர்களே, அபினந்தனுக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்!’ - பாகிஸ்தானியரின் ட்வீட்

இன்சாஃபியன் என்ற பெயரிலுள்ள பாகிஸ்தான் பதிவர், `அபினந்தன் மிகவும் பாதுகாப்பாகவும், எங்களிடம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். அன்புள்ள இந்தியர்களே, நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவருடைய சீருடைக்கு மரியாதை தருகிறோம். நீங்கள் எங்களுக்கும் மரியாதை தருவீர்கள் என்று நம்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.

`அன்புள்ள இந்தியர்களே, அபினந்தனுக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்!’ - பாகிஸ்தானியரின் ட்வீட்

சாயிஷா ஹைதர் ஷா என்ற பாகிஸ்தானியப் பெண் பதிவர், `அபினந்தன் பேசும் வீடியோவை வெளியிட்டு, இதுதான் ஜெனீவா ஒப்பந்தத்தில் கூறியபடி எங்களுடைய விருந்தினரை நாங்கள் நன்முறையில் கவனிப்பதாகும். உங்களுடைய பைலட், எங்களுடைய விருந்தினர். போர் வேண்டாமென சொல்லுங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

ஹார்டி என்ற இந்தியப் பதிவர், அபினந்தன் பேசும் வீடியோவை வெளியிட்டு, `இது மட்டும் உண்மையென்றால், மொத்த இந்தியாவும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையைப் பாராட்டும். தயவுசெய்து அவரைப் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அனுப்புங்கள்’ என்று கூறியுள்ளார்.

`அன்புள்ள இந்தியர்களே, அபினந்தனுக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்!’ - பாகிஸ்தானியரின் ட்வீட்

கிரன் குமார் என்ற இந்தியப் பதிவர், `கடந்த 1999ம் ஆண்டில் கார்கில் போரின்போது விமானம் பழுதானதால் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய கே.நச்சிகேட்டா என்ற இந்திய வீரரை, எட்டு நாள்களுக்குப் பின்னர் பாதுகாப்போடு ஒப்படைத்தனர். தற்போது பாகிஸ்தானின் PAF F17 விமானத்தைத் துரத்தித் தவறான பகுதிக்குச் சென்று அபினந்தன் மாட்டியிருப்பது அவரது போதாத காலம்’ என்று கூறியுள்ளார். இதன்மூலம், இவரும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஆகாஷ் ஜெயின் என்ற இந்தியர், `அபிநந்தனின் வீடியோ நம்மை அமைதிப்படுத்துகிறது. அவர் மரியாதையுடன் நடத்தப்படுவது தெரியவருகிறது. அபினந்தனை பாகிஸ்தான் ராணுவம் மீட்டுள்ளது. ஜெனீவா ஒப்பந்தப்படி அவரை மிகுந்த மரியாதையுடன் இந்தியா வசம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்’ என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இத்தகைய ட்வீட்கள், இரு நாட்டு மக்களிடையே உள்ள மனிதநேயத்தையும், நல்லுறவு நாடும் எண்ணத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளன.