Published:Updated:

இனி அனைத்துப் போக்குவரத்துக்கும் ஒரே கார்டு போதும்!- குஜராத்தில் தொடங்கிவைத்த மோடி

இனி அனைத்துப் போக்குவரத்துக்கும் ஒரே கார்டு போதும்!- குஜராத்தில் தொடங்கிவைத்த மோடி
இனி அனைத்துப் போக்குவரத்துக்கும் ஒரே கார்டு போதும்!- குஜராத்தில் தொடங்கிவைத்த மோடி

மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்மூலம், ஆதார் கார்டு, ஆன்லைன் பணப்பரிமாற்றம் எனப் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக `ஒரே தேசம் ஒரே அட்டை' என்ற திட்டத்தை பொதுப்போக்குவரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அட்டைக்கு தேசியப் பொதுப்போக்குவரத்து அட்டை (NCMC) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார்.

இனி அனைத்துப் போக்குவரத்துக்கும் ஒரே கார்டு போதும்!- குஜராத்தில் தொடங்கிவைத்த மோடி

இதன் தொடக்கவிழாவில் பேசிய பிரதமர், தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட `மேட் இன் இந்தியா' கார்டைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இந்த வசதி, சில நாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளன எனக் கூறினார்.

தேசியப் பொதுப்போக்குவரத்து அட்டையானது, இணைப்பிலுள்ள வங்கிகளின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது ப்ரீபெய்டு கார்டு ஆகிய வடிவங்களில் வழங்கப்படும். இந்த கார்டு, ரூபே டெபிட், கிரெடிட் கார்டைப்போலவே எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட 25 வங்கிகளின் மூலம் வழங்கப்படும்.

இனி அனைத்துப் போக்குவரத்துக்கும் ஒரே கார்டு போதும்!- குஜராத்தில் தொடங்கிவைத்த மோடி

இந்த கார்டை, தேசிய அளவிலான பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்துகளிலும், ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணத்திற்கும் இதைப் பயன்படுத்தலாம். அதேபோல நாடெங்கும் இருக்கும் சுங்கச்சாவடிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கும் இதே அட்டையைப் பயன்படுத்தலாம். வாகனங்களை பார்க்கிங் செய்யுமிடங்களில் பார்க்கிங் கட்டணம், சில்லறை விற்பனையகங்களில் ஷாப்பிங் மற்றும் பணத்தை வங்கிக்கணக்கிலிருந்து எடுப்பதற்கும்கூட பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்த கார்டில் கேஷ்பேக் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சலுகைகள் உள்ளன. இதன்மூலம் போக்குவரத்து தொடர்பான கட்டணங்கள் அனைத்தையும் மின்னணு மயமாக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.