Published:Updated:

`உங்கள் இணையதளத்தை மீட்டெடுக்க உதவுகிறோம்!- பா.ஜ.க-வை கிண்டல் செய்த காங்கிரஸ்

`உங்கள் இணையதளத்தை மீட்டெடுக்க உதவுகிறோம்!- பா.ஜ.க-வை கிண்டல் செய்த காங்கிரஸ்
`உங்கள் இணையதளத்தை மீட்டெடுக்க உதவுகிறோம்!- பா.ஜ.க-வை கிண்டல் செய்த காங்கிரஸ்

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.bjp.org, ஹேக்கர்களால் நேற்று முடக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒருபக்கம் 'டிஜிட்டல் இந்தியா' என்ற கோஷத்துடன், ஆன்லைன் பணப்பரிமாற்றம், ஆதார் அட்டை என அனைத்தையும் ஆன்லைனுக்கு மாற்றிவருவதில் ஆளும் பா.ஜ.க அரசு தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 

`உங்கள் இணையதளத்தை மீட்டெடுக்க உதவுகிறோம்!- பா.ஜ.க-வை கிண்டல் செய்த காங்கிரஸ்

ஆன்லைனுக்கு மாறிவரும் மக்களின் எண்ணிக்கை பெருகுவதுபோலவே, ஆன்லைன் மோசடிகள், திருட்டுகளென ஆன்லைன் குற்றங்களும் பரவலாகப் பெருகிவருகின்றன. இதனால் பாமர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இந்தச் சூழலில், யாரோ சில விஷமிகளால் முடக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் இணையதளத்தை ஒரு நாளுக்கு மேலாகியும் மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

`உங்கள் இணையதளத்தை மீட்டெடுக்க உதவுகிறோம்!- பா.ஜ.க-வை கிண்டல் செய்த காங்கிரஸ்

ஏற்கெனவே இணையதள முடக்கத்தால் கடுப்பிலிருக்கும் பா.ஜ.க-வை காங்கிரஸ் கட்சி சீண்டிப்பார்க்கும் வேலையைச் செய்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில், `நீண்ட நேரமாக உங்களுடைய இணையதளம் முடக்கப்பட்டிருப்பதாக நாங்கள் அறிய வருகிறோம். உங்களுடைய இணையதளத்தை மீட்டெடுக்க எங்களது உதவியை நாடினால் மகிழ்வுடன் உதவக் காத்திருக்கிறோம்' என்று சிரிப்பு ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளனர். இதைக் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ஷேர் செய்து கிண்டலடித்துவருகிறார்கள். தற்போதுவரை அந்த இணையதளத்தை முடக்கியதற்கு யாருமே பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.