Published:Updated:

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சிபிசிஐடி அதிரடி சோதனை

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் இன்று சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ தாரா சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய புள்ளியுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து முக்கிய புள்ளி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மருமகனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான குருநாத் மெய்யப்பன் தான் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை போர்ட் கிளப்பில் உள்ள  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் இன்று சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடியின் இந்த சோதனை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.