Published:Updated:

தமிழகத்திலும் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

Vikatan Correspondent
தமிழகத்திலும் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!
தமிழகத்திலும் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!
தமிழகத்திலும் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

சென்னை: கடுமையான வெப்பதால் மாணவர்கள் அவதிப்படுவார்கள் என்று கருதிய தமிழக அரசு, பள்ளிகளை ஜூன் 10ஆம் தேதி திறக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த கத்திரி வெளியில் இன்றுடன் முடிவடைந்தாலும் இதன் தாக்கம் சில நாட்கள் நீடிக்கும்.

##~~##
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தால் கோடை விடுமுறையை ஒருவாரம் நீட்டித்து தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை வெப்பத்தின் கடுமை தொடர்வதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை கூறியுள்ளது.
புதுச்சேரியிலும் பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் என்று அம்மாநில அரசு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.