Published:Updated:

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மனு தாக்கல்

Vikatan Correspondent
ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி  மனு தாக்கல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மனு தாக்கல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி  மனு தாக்கல்

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சாந்த குமார் என்பவர்  இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்," ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளில் ஒருவர், குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதித்திருக்கக் கூடாது என தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரது கருத்து மாறியுள்ள நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். இந்த மறுவிசாரணை முடிவடையும் வரை

##~~##
இவ்வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் தூக்கை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும்.
மேலும் ராஜீவ் காந்தியின் கொலையை பின்னணியாக கொண்ட திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்க வேண்டும்"  எனக் கூறியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.