Published:Updated:

100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்த 4 என்ஜினியர் சஸ்பெண்ட்: கலக்கத்தில் 100 பேர்!

Vikatan Correspondent
100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்த 4 என்ஜினியர் சஸ்பெண்ட்: கலக்கத்தில் 100 பேர்!
100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்த 4 என்ஜினியர் சஸ்பெண்ட்: கலக்கத்தில் 100 பேர்!

விருதுநகர்: மத்திய அரசின் 100 நாள் வேலை திட்ட நிதியை முறைகேடாக கையாடல் செய்ததாக விருதுநகரில் 4 என்ஜினியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து தமிழகத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ள 8 மாவட்டங்களிலுள்ள என்ஜினியர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்த 4 என்ஜினியர் சஸ்பெண்ட்: கலக்கத்தில் 100 பேர்!

மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ஒன்றியத்தின் மூலமாக ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ரோடு அகலப்படுத்துதல், ஏரிகள் ஆழப்படுத்துதல் உள்பட ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 140 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கண்காணிக்க, சமூக தணிக்கை இயக்குனர் சட்டநாதன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழகத்தில், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் தலா ஒரு ஒன்றியத்தில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்போது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட பணிகளில் 10 சதவீத பணிகள் மட்டுமே நடந்திருப்பதும், மீதமுள்ள 90 சதவீத பணிகளை செய்யாமலேயே நிதியை முறைகேடாக கையாடல் செய்ததும் தெரியவந்தது.

##~~##
இதையடுத்து சமீபத்தில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரிடம் இந்த திட்டத்தில் உள்ள மோசடிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒன்றிய அலுவலக என்ஜினியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்திருந்தது. இதன் அடிப்படையில் விருதுநகர் ஒன்றியத்தில், சுப்பையா, திபக் ராஜ், ஜெயதுரை, அன்பழகன் ஆகிய 4 என்ஜினியர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.
இதேபோல், மீதமுள்ள 8 மாவட்டங்களில் உள்ள என்ஜினியர்களையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து 8 மாவட்ட ஒன்றிய அலுவலகத்தில் உள்ள 100 என்ஜினியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
-எம்.கார்த்தி