Published:Updated:

இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் போலீஸ் பணிக்கு ஆள்சேர்ப்பு!

இந்தியாவின் தலைமை ராணுவத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்புக்கு வந்தபோது, ராணுவத்தின் அனைத்து மட்டத்திலும் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது ராணுவத்தின் போலீஸ் படைப்பிரிவில் பெண்களைச் சேர்ப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் போலீஸ் பணிக்கு ஆள்சேர்ப்பு!
இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் போலீஸ் பணிக்கு ஆள்சேர்ப்பு!

இந்திய ராணுவத்தின் போலீஸ் படைப்பிரிவில் முதன்முறையாக பெண்கள் சேர்க்கப்படவுள்ளார்கள். இந்தப் பணியில் சேர விருப்பமுள்ள பெண்கள், இன்றுமுதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமே பெண்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். தற்போதுதான் இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக ராணுவத்தின் போலீஸ் படைப்பிரிவில் வீரர்களாகப் பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். 

இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் போலீஸ் பணிக்கு ஆள்சேர்ப்பு!

இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை, சண்டையிடுவதில் பெண்களுக்கு இருக்கும் சிரமங்களைக் கருத்தில்கொண்டு போலீஸ் படைப்பிரிவில் பெண்கள் நியமிக்கப்படுவதில்லை. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ராணுவத்தில் பெண் வீரர்கள் நியமிக்கப்படும் வழக்கம் இருந்துவருகிறது. இந்தியாவின் தலைமை ராணுவத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்புக்கு வந்தபோது, ராணுவத்தின் அனைத்து மட்டத்திலும் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது ராணுவத்தின் போலீஸ் படைப்பிரிவில் பெண்களைச் சேர்ப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் போலீஸ் பணிக்கு ஆள்சேர்ப்பு!

பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ள பெண்கள், இந்திய ராணுவத்தின் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின்மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் ஜூன் 8 ஆகும். ராணுவ போலீஸ் படைப்பிரிவில் சேர்க்கப்படும் பெண் வீரர்களுக்கு, ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவத் தளங்களைக் கண்காணிப்பது, ராணுவத்தின் விதிகளை மீறுவோரைக் கண்காணித்துத் தடுப்பது, போர்க்காலங்களில் ராணுவத் தளவாடங்களைப் பராமரிப்பது, போர்க்கைதிகளைக் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் வழங்கப்படவுள்ளது. வருங்காலத்தில், ராணுவத்தின் அனைத்துப் பிரிவிலும் 20 சதவிகிதம் அளவுக்குப் பெண்கள் சேர்க்கப்படுவார்கள்.