Published:Updated:

தேர்தல் முடிந்த மறுநாளிலேயே உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!

தெ.சு.கவுதமன்
தேர்தல் முடிந்த மறுநாளிலேயே உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!
தேர்தல் முடிந்த மறுநாளிலேயே உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வெற்றிவாய்ப்பைப் பாதிக்குமென மத்திய அரசு கருதியதால், நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தார்கள். ஏழு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில், நேற்று இறுதிக்கட்டத் தேர்தல் முடிந்ததுமே, இந்தியப் பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையேற்றம் அமலுக்கு வந்தது. 

தேர்தல் முடிந்த மறுநாளிலேயே உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!

இதன்படி, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 8 - 10 பைசாவும், டீசல் விலையில் 15 - 16 பைசாவும் ஏற்றப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 73.72 ரூபாயிலிருந்து பத்து பைசா அதிகரித்து 73.82 ரூபாயாகவும், டீசல் விலை 69.72 ரூபாயிலிருந்து 16 பைசா அதிகரித்து 69.88 ரூபாயாகவும் உள்ளது. 

சர்வதேச அளவில், இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடைவிதித்ததால் பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதோடு, இரான் மீது அமெரிக்கா போர்தொடுக்கலாம் என்ற பதற்றமும் தற்போது நிலவி வருகிறது. அதற்கேற்ப இரானுக்கு அண்டை நாடுகளில் அமெரிக்கா தனது போர்த்தளவாடங்களை நிலைநிறுத்தி வருகிறது. இரானும் அமெரிக்காவின் சவாலை எதிர்கொள்ளத் தயார்ப்படுத்தி வருகிறது. இந்தக் குழப்பமான சூழல் காரணமாக வரும் காலத்தில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால் நம் நாட்டு பெட்ரோல், டீசல் விலையில் அது எதிரொலிக்கும்.