Published:Updated:

தமிழ்நாட்டில் முதல் முறையாக கன்னியாகுமரியில் எலைட் வகுப்பு தொடங்கியது

விகடன் விமர்சனக்குழு
தமிழ்நாட்டில் முதல் முறையாக கன்னியாகுமரியில் எலைட் வகுப்பு தொடங்கியது
தமிழ்நாட்டில் முதல் முறையாக கன்னியாகுமரியில் எலைட் வகுப்பு தொடங்கியது

நாகர்கோவில்: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் எலைட் திட்டம் முதன் முதலாக குமரி மாவட்டத்தில், ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக கன்னியாகுமரியில் எலைட் வகுப்பு தொடங்கியது

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு முறையான பயிற்சியளித்து நல்ல மதிப்பெண் எடுக்க வைப்பது. அவர்களின் தகுதியின் அடிப்படையில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்புகளில் சேர்க்கும் அளவுக்கு தரம் உயர்த்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது எலைட் திட்டம். இந்த திட்டத்தின் பயிற்சி வகுப்புக்களை தமிழகத்தில் முதன் முறையாக குமரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக கன்னியாகுமரியில் எலைட் வகுப்பு தொடங்கியது

குமரி மாவட்டத்தில் மொத்தம் 54 மாணவர்கள் இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த திட்டத்திற்கான துவக்கவிழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை துவங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் நாகராஜன், இனி உங்களுடைய குறிக்கோள் எல்லாம் அதிக மதிப்பெண்களை பெறுவதில் தான் இருக்க வேண்டும். பொழுது போக்கிற்கு செலவிடும் நேரத்தை குறைத்து கொண்டு இந்த சமூகத்தின் பழுது போக்க படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக கன்னியாகுமரியில் எலைட் வகுப்பு தொடங்கியது

அப்போது தான் நீங்கள் உயர் பதவிகளுக்கு வர முடியும். தினமும் வகுப்பில் எடுக்கும் பாடங்களை அன்றே மனப்பாடம் செய்து படிக்க வேண்டும். படிப்பில் முறையான கவனம் செலுத்தி முதலிடத்தை நோக்கி ஓடுங்கள் என்று மாணவர்களுக்கு உற்சாகமூட்டி பேசியவர், மாணவர்களுக்கு பேனாவை பரிசாக வழங்கி அசர வைத்தார்.

##~~##
எலைட் வகுப்புகள் இனி தமிழகம் முழுவதும் பயணிப்பதற்கான விதை கன்னியாகுமரியில் விழுந்துள்ளது.

என்.சுவாமிநாதன்

படங்கள்: ரா.ராம்குமார்