Published:Updated:

சசிகலா அக்காள் மகன் பாஸ்கரன் மேலும் ஒரு வழக்கில் கைது!

விகடன் விமர்சனக்குழு
சசிகலா அக்காள் மகன் பாஸ்கரன் மேலும் ஒரு வழக்கில் கைது!
சசிகலா அக்காள் மகன் பாஸ்கரன் மேலும் ஒரு வழக்கில் கைது!
சசிகலா அக்காள் மகன் பாஸ்கரன் மேலும் ஒரு வழக்கில் கைது!

சென்னை: சசிகலா அக்காள் மகன் பாஸ் என்கிற பாஸ்கரன் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூரை சேர்ந்த சாரங்கபாணி என்பவர் தனது மகளுக்கு அரசு வேலை கேட்டு தலைவன் படத்தின் கதாநாயகன் பாஸ்கரனை அனுகியுள்ளார்.

அப்போது, 3 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார் பாஸ்கரன். ஆனால், பாஸ்கரனோ கூறியபடி அரசு வேலை  வாங்கி கொடுக்கவில்லை.

இதனால்,  பணத்தை திருப்பி கேட்டுள்ளார் சாரங்கபாணி. ஆனால், பணம் கொடுக்காமல் பாஸ்கரன் இழுத்தடித்து வந்துள்ளார். இதையடுத்து, சாரங்கபாணி காவல்துறையினர் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் பாஸ்கரனை சென்னையில் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

##~~##
இந்த நிலையில் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தரம்சந்த், தன்னிடம் பாஸ்கரன் கடந்த 2001 முதல் 2005 ஆம் ஆண்டு வரை 1.5 கோடி ரூபாய் பணம் வாங்கியதாகவும், அதனை அவர் திருப்பி தராமல் இழுத்து அடிப்பதாகவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.
இந்த மோசடி புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பாஸ்கரன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த புகாரின் பேரில் அவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.