Published:Updated:

மக்கள் நலனில் துளியும் அக்கறையில்லாத மத்திய அரசு: சீமான் குற்றச்சாட்டு

மக்கள் நலனில் துளியும் அக்கறையில்லாத மத்திய அரசு: சீமான் குற்றச்சாட்டு
மக்கள் நலனில் துளியும் அக்கறையில்லாத மத்திய அரசு: சீமான் குற்றச்சாட்டு
மக்கள் நலனில் துளியும் அக்கறையில்லாத மத்திய அரசு: சீமான் குற்றச்சாட்டு

சென்னை: மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் பொருளாதார முடிவுகளை கொஞ்சமும் தயக்கமின்றி மத்திய அரசு எடுத்து வருவது மக்கள் நலனில் துளியும் அக்கறையற்றது என்பதையே காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை இரட்டிப்பாக உயர்த்திக்கொள்ள மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு எடுத்துள்ள முடிவு, விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலைகளையும், மின்சார கட்டணத்தையும் கடுமையாக உயர வழிவகுத்துள்ளது.

இயற்கை எரிவாயுவிற்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் விலை, ஒரு பிரிட்டிஷ் தர்மல் யூனிட்டிற்கு 4.1 டாலர்களாகும். இதனை இரட்டிப்பாக்கி, அதாவது யூனிட்டிற்கு 8.2 டாலர் என்று உயர்த்திக்கொள்ள மத்திய அமைச்சரவைக் குழு அனுமதியளித்துள்ளது.

இதனால், உரம் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு ஆண்டிற்கு ரூ.9,000 கோடி கூடுதலாக செலவாகும். தமிழ்நாட்டிலும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவைகள் தயாரித்து தமிழக அரசுக்கு அளிக்கும் மின்சாரத்தின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் கட்டணம் உயரும்.

ஒரு தனியார் நிறுவனத்தின் லாப நோக்கிற்காக இந்த நாட்டின் மத்திய அமைச்சரவை இந்த அளவிற்கு இறங்கிச் சென்று சலுகைகளை வாரி வழங்குகிறது என்றால், இந்த நாடு மக்களுக்காகவா அல்லது இப்படிப்பட்ட பெரும் நிறுவனங்களுக்காகவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

##~~##
விவசாயத்தில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்றும், நமது நாட்டில்தான் தொலைபேசி, அலைபேசி கட்டணங்கள் குறைவாக இருக்கிறது என்றும் பேசிவரும் பிரதமர், நமது நாட்டு மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் பொருளாதார முடிவுகளை கொஞ்சமும் தயக்கமின்றி எடுத்து வருவது, அவரது தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு மக்கள் நலனில் துளியும் அக்கறையற்றது என்பதையே காட்டுகிறது" என்று சீமான் கூறியுள்ளார்.