Published:Updated:

ராமேஸ்வரம் சோலார் மிஷன் புராஜக்ட் துவக்கம்

விகடன் விமர்சனக்குழு
ராமேஸ்வரம் சோலார் மிஷன் புராஜக்ட் துவக்கம்
ராமேஸ்வரம் சோலார் மிஷன் புராஜக்ட் துவக்கம்

ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவு திட்டமான ‘‘ராமேஸ்வரம் சோலார் மிஷன் புராஜக்ட்’’ டை கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் துவக்கி வைத்தார்.

ராமேஸ்வரம் சோலார் மிஷன் புராஜக்ட் துவக்கம்

 ஜனாதிபதி பதவியில் இருந்து கலாம் ஓய்வு பெற்றாலும் நாட்டிற்கும் சமுதாயத்திற்குமான தனது பணியை இடைவிடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். 2020ல் வளமிக்க இந்தியாவை உருவாக்க உழைத்து கொண்டிருக்கிறார். இதற்காக நாடுமுழுவதும் உள்ள இளைஞர்களை சந்தித்து பல்வேறு திட்டங்களில் அவர்களை பங்கெடுக்க வைத்து வருகிறார். அவரது இந்த லட்சிய கனவுகளில் ஒன்றுதான் ‘ராமேஸ்வரம் சோலார் மிஷன் புராஜக்ட்’. தான் பிறந்து வளர்ந்த பூமிக்கு சூரியனின் துணை கொண்டு ஒளியேற்ற இந்த திட்டத்தை துவக்கியுள்ளார்.

ராமேஸ்வரம் சோலார் மிஷன் புராஜக்ட் துவக்கம்

இந்த திட்டத்தின்படி சூரிய சக்தி மூலம் ராமேஸ்வரத்திற்கு தேவையான மின்சாரத்தை பெறுவதன் மூலம் சூரிய சக்தியினால் இயங்கும் முழுமையான நகரமாக ராமேஸ்வரத்தை மாற்ற திட்டமிட்டுள்ளார். பாம்பன் பாலம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனை, ஏழ்மையில் வாடும் மீனவர்களின் நாட்டுப்படகுகள் ஆகியவற்றிற்கு சூரிய சக்தி மூலம் மின்சக்தியினை பெற உள்ளவற்றில் முக்கியமானவையாகும்.

இதன் முதல் கட்டமாக ராமேஸ்வரத்தில் உள்ள தனது இல்லமான ‘ஹவுஸ் ஆப் கலாம்’ மற்றும் ‘மிஷன் ஆப் லைப்’ எனப்படும் தனது பெயரில் அமைந்துள்ள கேலரிக்கும் மின்சாரத்திற்கு பதிலாக சூரிய ஒளியில் இருந்து மின்சக்தியை பெறுவதற்கான பணியை தனது சொந்த செலவில் மேற்கொண்டுள்ளார். இந்திய பாதுகாப்பு துறை ஆராய்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுபிள்ளை இதனை துவக்கி வைத்தார்.

ராமேஸ்வரம் சோலார் மிஷன் புராஜக்ட் துவக்கம்

அப்போது பேசிய சிவதாணுபிள்ளை, ‘‘இந்தியாவின் முக்கிய தேவைகளாக மின்சாரமும், பெட்ரோலியமும் உள்ளது. இயற்கை வளங்களை பயன்படுத்துவதன் மூலம் அதன் தேவையினை குறைக்க முடியும். தூய்மையான சக்தி சூரிய ஒளி மூலம் கிடைக்கிறது. அதனை கொண்டு கலாமின் வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியினை தான் பிறந்த ஊருக்கும் கிடைக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதற்கு உறுதுணையாக டாக்டர் விஜயராகவனின் ‘இன்டர்நேஷனல் வீ சர்வ் பவுன்டேஷனு’ம், ‘ஸ்டால்வார்ட் எனர்ஜி’ நிறுவனமும் இருக்கிறது. இதன் மூலம் கோயில், பாம்பன் பாலம், பள்ளிகள், தெருவிளக்குகள், மருத்துவமனை போன்றவற்றிற்கு தேவையான மின்சாரத்தினை சூரிய சக்தி மூலம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

##~~##
இதனை தொடர்ந்து, இந்தியாவில் முதன்முறையாக மீனவர்களின் நாட்டுப்படகுகளில் பொறுத்தப்பட்டுள்ள சூரிய சக்தி விளக்குகளை அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, ‘‘டாக்டர் கலாம் தனது வீடு மட்டுமல்லாது ராமேஸ்வரம் முழுமைக்கும் சோலார் மயமாக மாற்ற எண்ணியுள்ளார். அதற்கு உறுதுணையாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செயல்பட திட்டமிடப் பட்டுள்ளது.
மின்வசதி இல்லாமல் இருக்கும் தனுஷ்கோடி பகுதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு முதல் கட்டமாக 20 நாட்டுப்படகுகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இரவு நேரங்களில் மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்கவும், இந்த சோலார் விளக்கின் வெளிச்சத்தினை நாடி அதிக மீன்கள் வரும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்களின் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். இதற்கு ராமேஸ்வரம் மக்களும், என்.ஜி.ஓ. அமைப்புகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார்.
அதன்பின், கலாம் பயின்ற நம்பர் 1 நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம், மற்றும் அறிவு மையம் ஆகியவற்றை இன்டர்நேஷனல் வீ சர்வ் பவுன்டேஷன் தலைவர் டாக்டர் விஜயராகவன் துவக்கி வைத்தார். இந்நிகழ்சிகளில் ஸ்டால்வார்ட் எனர்ஜி நிறுவன சேர்மன் கெவின், நிர்வாக இயக்குனர் அருணாச்சலம், இயக்குனர் குமார், திட்ட இயக்குனரும் கலாமின் பேரனுமான சேக்சலீம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். சூரிய சக்தி திட்டம் மற்றும் இதற்கான தொடர் ஆய்வுகளை இன்டர் நேஷனல் வீ சர்வ் பவுன்டேஷனும், ஸ்டால்வார்ட் எனர்ஜி நிறுவனமும் இணைந்து மேற்கொள்ள உள்ளது.

இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி