Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவர்களை வேதனையடைய வைத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காரைக்கால் மற்றும் நாகபட்டினத்தை சேர்ந்த 65 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இந்த பதட்டம் அடங்குவதற்குள்ளாகவே இலங்கை கடற்படையினர் தங்களின் அடுத்த கட்ட அட்டூழியத்தை துவக்கிவிட்டனர். நேற்று (3ஆம் தேதி) காலை ராமேஸ்வரத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் அனைவரும் நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களில் 5 விசைப்படகுகளையும் அதில் மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்களையும் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை மன்னாரில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தை தடுக்க கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் விடாமல் குரல் கொடுத்து கொண்டே இருக்கின்றன. ஆனால் மத்திய அரசோ இதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

இந்தியாவின் எதிர்ப்பு குரல் வராததால் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நாள் தோறும் சிறை பிடித்து செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 88 மீனவர்களையும் அவர்கள் சென்ற 14 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர் இலங்கை கடற்படையினர்.

ஏற்கனவே ராமேஸ்வரத்தை சேர்ந்த 34 மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று இலங்கை கடற்படையினர் மேலும் 23 மீனவர்களை பிடித்து சென்றிருப்பது ராமேஸ்வரம் மீனவர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி மீன் பிடிக்க செல்வார்களா என்பது கேள்விகுறியாக உள்ளது.

நடுக்கடலில் தவிர்த்த 6 மீனவர்கள் மீட்பு; ஒருவர் மாயம்

இதனிடையே, கடந்த 28ஆம் தேதி பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு கடலில் மூழ்கியதில் மீனவர் ஒருவரை காணவில்லை. தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த பெனிட்டோ பாதர் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் தங்கச்சிமடத்தை சேர்ந்த சேசுஇருதயம் உட்பட 7 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

##~~##
இவர்கள் சென்ற படகு தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாம் தீடை கடலில் கிடக்கும் கடலை ஆழப்படுத்தும் கருவியில் (சேது சமுத்திர திட்டம் தோண்டப்பட்ட போது ஸ்கட் எனும் கருவி உடைந்து கடலில் கிடக்கிறது) மோதியதில் படகு நொறுங்கி கடலில் மூழ்கியது. இதில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 7 பேரில் சேசு இருதயத்தை தவிர 6 பேரும் மூன்றாம் தீடையில் கரை ஏறி உயிர் தப்பினர். ஆனால் சேசுஇருதயத்தின் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்நிலையில் இன்று காலை மூன்றாம் தீடை பகுதியில் ரோந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அங்கு தவித்து கொண்டிருந்த 6 மீனவர்களையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். காணாமல் போன மீனவர் சேசுஇருதயத்தை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இரா.மோகன்