Published:Updated:

ஈரான் சிறையில் இருந்த 16 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

ஈரான்: ஈரான் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. மேலும், அவர்கள் மீதான அபராதம், எஞ்சிய சிறை தண்டனையையும்  ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து கடந்த டிசம்பர் 16-ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்களும் ஈரான் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, அவர்களை ஈரான் அரசு கைது செய்தது. அந்நாட்டு நீதிமன்றம் தமிழக மீனவர்களுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்திருந்தது.

##~~##
தமிழக மீனவர்களை விடுவிக்க, ஈரான் அரசுக்கு அந்த மீனவர்களின் குடும்பத்தினரும், மீனவ அமைப்புகளும், தமிழகம் மற்றும் இந்திய அரசும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று, ஈரான் அரசு தமிழக மீனவர்கள் 16 பேரையும் விடுவித்துள்ளது. மேலும், அவர்கள் மீதான அபராதம் மற்றும் எஞ்சிய சிறை தண்டனையையும் அந்நாட்டு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தமிழக மீனவர்கள் 16 பேரும் ஈரானில் இருந்து வருகின்ற 17 ஆம் தேதி மும்பை வழியாக தாயகம் திரும்புகின்றனர்.